முகமது வசீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஹம்மது வசீம் (ஆங்கிலம்: Muhammad Waseem) என்பவர் 1987 ஆகஸ்ட் 29 அன்று பிறந்த [1] ஒரு பாக்கித்தானின் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆவார். குத்துச்சண்டையில் இவர் விரைவாக சண்டையிடும் பாணியால் அறியப்பட்டார். இவருக்கு "பால்கான்" எனும் புனைப் பெயர் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

முஹம்மது வசீம் 1987 ஆகஸ்ட் 29 அன்று பாக்கித்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பிறந்தார். இவரின் தந்தை பாக்கித்தானில் ஓர் அரசு ஊழியராக இருந்தார். இவரின் தாயும் பாக்கித்தானைச் சேர்ந்தவர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2012 ஆம் ஆண்டில், முகமது வசீம் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் (அமெச்சூர்) தொழில்முறை வீரராக தேர்வு செய்யப்பட்டார், இருப்பினும் அவரது பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவில்லை, அதற்கு அவர் இவ்வாறு கூறினார்;

". . . என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. குத்துச் சண்டை கூட்டமைப்பு இந்த விஷயத்தை கையாண்டது. ஆனால் எந்த முடிவும் அதில் இருந்து வெளிவரவில்லை. இது உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமளிக்கிறது. நான் உலகின் சிறந்த குத்துச்சண்டை வீரராக விரும்பினேன், ஆனால் என் கனவு சிதைந்தது. . . " [2] முகம்மது வசீம் கடந்த ஆண்டு தனது ஐபிஎஃப் பட்டத்தினை வஞ்சித்துப் பெற்றார். தற்போது அவர் சமீபத்தில் எம்டிகே குளோபல் என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த நிறுவனத்திற்காக தற்போது இவர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

தொழில்முறை விளையாட்டு[தொகு]

2010 காமன்வெல்த் விளையாட்டு

இந்தியாவின் புதுதில்லியில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பாக்கித்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலத்தையும் வென்றுள்ளார்.[3]

2009 கிங்ஸ் கோப்பை

2009 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள கிங்ஸ் கோப்பையில் முகம்மது வசீம் பலூச்சுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. காலிறுதியில் சிங்கப்பூரின் சலே முகமதுவை ஒருதலைப்பட்ச ஆட்டத்தில் 26–6 என்ற கணக்கில் தோற்கடித்தார்.[4]

2010 ஆசிய விளையாட்டு

2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈரானின் மசூத் ரிகியை 32 வது சுற்றில் தோற்கடித்தார்.[5]

2010 உலக கம்பாட் விளையாட்டு

2010 இல் சீனாவில் நடைபெற்ற உலக காம்பாட் விளையாட்டின் இறுதிப் போட்டியில் டொமினிகன் குடியரசின் டகோபெர்டோ அகுவெரோவை [6] தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

2010 அக்மத் கோமர்ட் குத்துச்சண்டை போட்டி

2010 இல் துருக்கியின் இஸ்தான்புல்லில்நடைபெற்ற 4 வது சர்வதேச அக்மத் கோமர்ட் குத்துச்சண்டை போட்டியில் [7] வெண்கலப் பதக்கம் வென்றார் வசீம். காலிறுதியில், பலோச் தனது துருக்கிய எதிராளியான காக்டாஸ் யிகில்மாஸை 14–1 என்ற கணக்கில் வென்றார், ஆனால் அரையிறுதியில் வசீம் உக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்ஸாண்டர் கிரிஷ்சுக்வால் 8–2 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டதால் வெண்கலப் பதக்கத்தெஇயே வெல்ல முடிந்தது.[8][9][10]

2010 தெற்காசிய விளையாட்டு

முகம்மது வசீம் பலூச் 2010 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற 11 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.[11] இறுதிப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில், சூரஞ்சோய் சிங் என்ற இந்திய வீரரால் தோற்கடிக்கப்பட்டார். முன்னதாக அரையிறுதியில், பூட்டானின் வீர்ரான கின்லிக்கு எதிரான போட்டியை முகம்மது வசீம் 12–5 என்ற கணக்கில் வென்றார்..[12]

2011 அதிபர் கோப்பை

2011 இல்இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 21 வது அதிபர் கோப்பையில் முகம்மது வசீம் பலூச் வெண்கலப் பதக்கம் பெற்றார் . அவர் காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் ஈரானின் ரெசா கோர்ஸ்போரியை 22: 6 என்ற கணக்கில் தோற்கடித்தார். காலிறுதியில் அவர் சிங்கப்பூரின் முகமது கனூரி கமீத்தை [13] 16: 6 என்ற கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில், சப்பானின் கட்சுவாக்கி சூசாவால் 25:19 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.[14][15][16]

2011 சாகீத் பெனாசிர் பூட்டோ சர்வதேச குத்துச்சண்டை போட்டி

2011 இல் இஸ்லாமாபாத்தில் நடந்த 2 வது சாகீத் பெனாசிர் பூட்டோ சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முகம்மது வசீம் பலூச் தங்கப்பதக்கம் பெற்றார், மேலும் போட்டியின் சிறந்த குத்துச்சண்டை வீரராகவும் அறிவிக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் வசீம் தனது கென்ய போட்டியாளரான பென்சன் கிச்சாருவை 26–9 என்ற கணக்கில் தோற்கடித்தார்.[17][18]

2014 காமன்வெல்த் விளையாட்டு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முக்ம்மது வசீம் பாக்கித்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வசீம் ஃப்ளைவெயிட் பிரிவுக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பாக்கித்தானின் குத்துச்சண்டை அணியின் ஒரே வீரர் ஆனார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோலோனியுடன் நெருங்கிய போட்டிக்கு பின்னர் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

2014 ஆசிய விளையாட்டு

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வசீம் வெண்கலப் பதக்கம் வென்றார்.[19]

தொழில்முறை குத்துச்சண்டை சிறப்பம்சங்கள்[தொகு]

முகம்மது வசீம் பல தேசிய போட்டிகளில் வென்றுள்ளார். குறிப்பாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கித்தான் குத்துச்சண்டையில் தோல்வியே காணாத வீரர் எனும் வரலாற்றை உருவாக்கினார். முஹம்மது வசீம் 2010 முதல் 2015 வரை பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த உலகக் குத்துச்சண்டைத் தொடருக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் ஒவ்வொரு முறையும் பாக்கித்தான் குத்துச்சண்டை அமைப்பு மறுத்துவிட்டது.  

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-10-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Boxing: Waseem eyes top league performance - The Express Tribune". Tribune.com.pk. 2013-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  3. "Boxing Results Commonwealth Games 2010". Commonwealth Games Official Website. பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
  4. "Pakistan Sports: Kings Cup International Boxing, Pakistan young boxer Waseem reach the semi-final". Ubaidawanmedia.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.
  5. "Archived copy". Archived from the original on 20 November 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-11-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Archived copy". Archived from the original on 4 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-12-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Archived copy". Archived from the original on 3 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-01-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "PMGilani2107_L[1] – World Tribune Pakistan". Worldtribunepakistan.com. Archived from the original on 2011-11-28. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  9. "US team briefed on quake relief efforts | Pakistan". thenews.com.pk. 2006-04-07. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  10. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 10 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-01-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "Archived copy". Archived from the original on 13 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  12. "SAF Boxing: Waseem and Niamat will fight for gold". Pakpassion.net. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  13. "Youth Olympic Boxing: Muhammed Hanurdeen falls 0-7 to an Uzbek in bronze medal bout". Redsports.sg. 2010-08-24. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  14. "21.President's Cup - Jakarta, Indonesia - July 3–9" (PDF). Amateur-boxing.strefa.pl. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.
  15. "Archived copy". Archived from the original on 3 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-01-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  16. Siddiqui, Rashid (2011-07-07). "Waseem ends President's Cup with a bronze - The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  17. "Waseem crushes Benson to win gold | Sports". thenews.com.pk. 2011-12-30. Archived from the original on 2014-07-26. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  18. "tribune.pk - This website is for sale! - English news Resources and Information". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04. {{cite web}}: Cite uses generic title (help)
  19. "17.Asian Games - Incheon, South Korea - September 24 - October 3 2014". amateur-boxing.strefa.pl. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_வசீம்&oldid=3567896" இலிருந்து மீள்விக்கப்பட்டது