முகமது நசீப் குரேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகமது நசீப் குரேசி (Mohammed Naseeb Qureshy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி புவியியலாளர் ஆவார். எம்.என். குரேசி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 1933 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

புவி இயற்பியல் ஆய்வு இவரது முக்கிய ஆய்வுத் துறையாகும். அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் குரேசி பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள கொலராடோ சுரங்கப் பள்ளியில் புவி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சித்ரதுர்கா தாமிர மாவட்டத்தின் முதல் உள்நாட்டு வான்வழி புவி இயற்பியல் ஆய்வை எம்என் குரேசி வடிவமைத்து ஒருங்கிணைத்தார். இந்தியாவின் முதலாவது விரிவான புவியீர்ப்பு வரைபடங்களை வெளியிடுவதில் உச்சத்தை எட்டிய தேசிய பிராந்திய ஈர்ப்பு வரைபட திட்டத்தையும் இவர் தொடங்கினார் 1983 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை முகமது நசீப் குரேசி இந்திய அரசின் புவி அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். இக்காலத்தில் ஐதராபாத்து தேசிய தொலை உணர்வு மையம், புதுதில்லியில் உள்ள நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்பு தேசிய மையம் போன்ற சில முக்கிய இந்திய அறிவியல் நிறுவனங்களை நிறுவ உதவினார்'

இயற்கை வளங்களைச் சுரண்டுவது தொடர்பான தேசியத் தேவைகளை சிறப்பாகச் செய்ய இயற்கை வளங்கள் தரவு மேலாண்மை அமைப்பையும் குரேசி தொடங்கினார். 1989 ஆம் ஆண்டில் முனைவர் குரேசி அணிசேரா நாடுகள் மற்றும் பிற வளரும் நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தையும் திட்டமிட்டு நிறுவினார்.

வெளியீடுகள்[தொகு]

1. MN Qureshy's research is synthesized in a book entitled Geophysical Framework of India, Bangladesh and Pakistan.[1]
2. M. N QURESHY, N. KRISHNA BRAHMAM, S. C GARDE and B. K MATHUR, Gravity Anomalies and the Godavari Rift, India;[2]
3. M. N. Qureshy and Waris E. K. Warsi, A Bouguer anomaly map of India and its relation to broad tectonic elements of the sub-continent [3]
4. M. N QURESHY, Relation of gravity to elevation and rejuvenation of blocks in India[4]

5.QURESHY, M.N. and IQBALLUDIN (1992) A review of geophysical constraints in modelling of the Gondwana crust in India. Tcctonophysics, v.2 12, pp. 14 1 - 1 5 1.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 16 மார்ச்சு 2004. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2005.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Qureshy, M. N.; Brahmam, N. Krishna; Garde, S. C.; Mathur, B. K. (1968). "Gravity Anomalies and the Godavari Rift, India". Geological Society of America Bulletin 79 (9): 1221. doi:10.1130/0016-7606(1968)79[1221:GAATGR]2.0.CO;2. Bibcode: 1968GSAB...79.1221Q. http://gsabulletin.gsapubs.org/content/79/9/1221.abstract. 
  3. "A Bouguer anomaly map of India and its relation to broad tectonic ele…". Archived from the original on 2013-08-29. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. Qureshy, M. N. (1971). "Relation of gravity to elevation and rejuvenation of blocks in India". Journal of Geophysical Research 76 (2): 545–557. doi:10.1029/JB076i002p00545. Bibcode: 1971JGR....76..545Q. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_நசீப்_குரேசி&oldid=3484481" இலிருந்து மீள்விக்கப்பட்டது