முகம்மது நசீது
முகம்மது நசீது Mohamed Nasheed މުހައްމަދު ނަޝީދު | |
---|---|
![]() | |
மாலைத்தீவுகள் நாடாளுமன்றத்தின் 19-வது அவைத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 29 மே 2019 | |
குடியரசுத் தலைவர் | இப்ராகிம் முகமது சாலி |
முன்னவர் | ஓசிம் இப்ராகிம் |
மச்சங்கோலி மேது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 28 மே 2019 | |
முன்னவர் | புதிய தொகுதி |
மாலைதீவு சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 30 ஆகத்து 2014 | |
துணை குடியரசுத் தலைவர் | முகம்மது சிபாசு |
முன்னவர் | இப்ராகிம் திதி |
மாலைத்தீவுகளின் 4-வது அரசுத்தலைவர் | |
பதவியில் 11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012 | |
துணை குடியரசுத் தலைவர் | முகமது வாகித் அசன் |
முன்னவர் | மாமூன் அப்துல் கயூம் |
பின்வந்தவர் | முகமது வாகித் அசன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 17 மே 1967 மாலே, மாலைத்தீவுகள் |
அரசியல் கட்சி | மாலைதீவு சனநாயகக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | லைலா அலி அப்துல்லா (முறிவு. 2020) |
பிள்ளைகள் | மீரா லைலா நசீது சாயா லைலா நசீது |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு பன்னாட்டுப் பாடசாலை, லிவர்பூல் யோன் மூர்சு பல்கலைக்க்ழகம் |
முகம்மது நசீது (Mohamed Nasheed, திவெயி: މުހައްމަދު ނަޝީދު; பிறப்பு: 17 May 1967) மாலைத்தீவு அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும்,[1] 2008 முதல் 2012 வரை மாலைத்தீவு அரசுத்தலைவராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் மாலைத்தீவுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத்தலைவரும்,[3] மாலைத்தீவு சனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.[4] 2008 அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முகம்மது நசீது 25% வாக்குகளைப் பெற்றார், அதன் பின்னர் 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த மாமூன் அப்துல் கயூமிற்கு எதிரான பொது எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். நசீது 2008 நவம்பர் 11 இல் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
2011-12 இல் எதிர்க்கட்சிகள் ந்சீதுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. இராணுவத்தினரும், காவல்துறையினரும் இதில் இணைந்து கொண்டனர். இதனை அடுத்து 2012 பெப்ரவரி 7 இல் நசீது பதவியில் இருந்து விலகினார். இராணுவத்தினரால் அதான் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து விலகுவதற்கு வற்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.[5] கயூமின் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களின் உதவியுடன் இராணுவப் புரட்சி மூலம் அவர் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.[6] இவருக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த முகமது வாகித் அசன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை செய்த மாலைத்தீவு தேசிய விசாரணைகள் ஆணைக்குழு நசீதின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறியது.[7] அவர் பதவியில் இருந்த போது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகம்மது என்பவரைக் கைது செய்தமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நசீது 2015 மார்ச்சில் கைது செய்யப்பட்டு,[8] 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[9] பன்னாட்டு மன்னிப்பு அவை இதனை "அரசியல் பழிவாங்கல்" எனக் குற்றஞ் சாட்டியது.[8][10] ஐக்கிய அமெரிக்க அரசுச் செயலகம் "விசாரணையின் போது பொருத்தமான குற்றவியல் நடைமுறைகள் இல்லாதது" குறித்துக் கவலை தெரிவித்தது.[9] இந்தியாவும் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.[11]
2016 இல், நசீது மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியம் சென்ற போது, அவருக்கு அந்நாடு அரசியல் புகலிடம் அளித்தது.[12] சட்டரீதியான தடைகளைச் சுட்டிக்காட்டி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது திட்டங்களை அவர் கைவிட்டார். கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் தனது வெற்றியை நிராகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்தார்.[13] 2018 அரசுத்தலைவர் தேர்தலில், நசீதின் இளமைக்கால நண்பரும், கட்சியின் வேட்பாளருமான இப்ராகிம் முகமது சாலி வெற்றி பெற்றதை அடுத்து, நசீது நாடு திரும்பினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மச்சங்கோலி மேது தொகுதியில் போட்டியிட்டு 1,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[14] அதை அடுத்து அவர் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 மே 6 இல், நசீது அவரது வீட்டுக்கருகில் தனது வாகனத்தில் ஏறும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் படுகாயமுற்றார்.[15]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nasheed chosen as consensus candidate for speaker". Maldives Independent. 28 May 2019. https://maldivesindependent.com/politics/nasheed-chosen-as-mdps-consensus-candidate-for-speaker-145615.
- ↑ Aitkenhead, Decca (1 April 2012). "Dictatorship is coming back to the Maldives and democracy is slipping away". The Guardian. https://www.theguardian.com/world/2012/apr/01/dictatorship-maldives-democracy?newsfeed=true.
- ↑ https://presidency.gov.mv/PO/FormerPresident/4
- ↑ Ramesh, Randeep (29 October 2008). "Human rights activist wins Maldives presidential election". The Guardian. https://www.theguardian.com/world/2008/oct/29/maldives-presidential-elections.
- ↑ "Maldives ex-president Mohamed Nasheed was 'forced out'". BBC News. 8 February 2012. https://www.bbc.co.uk/news/world-asia-16945764.
- ↑ Nasheed, Mohamed (8 February 2012). "The Dregs of Dictatorship". The New York Times. https://www.nytimes.com/2012/02/08/opinion/in-the-maldives-strangled-democracy.html.
- ↑ Sen, Ashish Kumar (30 August 2012). "Maldives panel: President was not forced to resign". The Washington Times. http://www.washingtontimes.com/news/2012/aug/30/maldives-panel-president-was-not-forced-resign.
- ↑ 8.0 8.1 Burke, Jason. "Former Maldives president Mohamed Nasheed jailed for 13 years". The Guardian. https://www.theguardian.com/world/2015/mar/14/former-maldives-president-mohamed-nasheed-jailed-for-13-years.
- ↑ 9.0 9.1 "Former Maldives president Nasheed jailed for 13 years". யாகூ! செய்திகள். https://news.yahoo.com/maldives-ex-leader-nasheed-sentenced-13-years-jail-185826787.html.
- ↑ "Maldives: 13 year sentence for former president 'a travesty of justice'". Amnesty International. 13 March 2015. https://www.amnesty.org/en/articles/news/2015/03/maldives-mohamed-nasheed-convicted-terrorism/.
- ↑ மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு சிறை: இந்தியா வருத்தம்
- ↑ "Mohamed Nasheed: Former Maldives president 'given UK asylum'". BBC News. 23 May 2016. https://www.bbc.com/news/world-asia-36365253.
- ↑ "Former Maldivian President Mohamed Nasheed renounces presidential bid citing illegal curbs on him". Scroll.in. https://scroll.in/latest/884678/former-maldivian-president-mohamed-nasheed-renounces-presidential-bid-citing-illegal-curbs-on-him.
- ↑ "Machangolhi Medhu Dhaairaa". https://majlis19.mihaaru.com/constituencies/85.
- ↑ "Former Maldives president hurt in suspected bomb attack" (in en). https://www.aljazeera.com/news/2021/5/6/former-maldives-president-nasheed-hurt-in-suspected-bomb-attack.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- The Island President official website
- Free President Nasheed
- Climate Hero & Former Maldives President Mohamed Nasheed Gets UK Asylum After Ouster & Jailing, Interview on Democracy Now!, 3 June 2016