உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது சைபுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகமது சைபுதீன் (Mohammad Saifuddin (பிறப்பு: நவமபர் 1, 1996) வங்காளதேசத் துடுப்பாட்ட ணியின் வீரர் ஆவார்.[1][2] இவர் வங்காளதேச அணிக்காக் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். துடுப்பாட்டத்தில் சகலத் துறையறாக விளங்குகிறார். 2015 ஆம் ஆண்டில் , 2016 ஆம் ஆண்டிற்கான 19வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கிண்னத் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றார்.[3]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

2016 -17 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் நவமப்ர் 13 இல் இவர் காமிக்கா விக்டோரியன்ஸ் அணி சார்பாக விளையாடினார்.[4]

2017-18 ஆம் ஆண்டிற்கான தாக்கா கோட்ட பிரீமியர் லீக் தொடரில் இவர் சினபூர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி 10 போட்டிகளில் 14 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[5] மேலும் அதே ஆண்டில் நடைபெற்ற வங்காளதேச கிரிக்கெட் லீக்கில் இவர் கிழக்கு மாகாண அணி சார்பாக விளையாடினார். ஏப்ரல் 2018 இல் நடைபெற்ற போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். இது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் முதல் நூறு ஓட்டங்கள் இது ஆகும்.[6]

2018-19 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் கோமிலா விக்டோரியன்ஸ் அணி சார்பாக விளையாடினார்.[7]

சர்வதேச போட்ட்டிகள்

[தொகு]

பன்னாட்டு இருபது20

[தொகு]

2017 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 4 இல் கொழும்பில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.மட்டையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இலங்கை அணி 6 இலக்குகளில் வெற்றி பெற்றது.[8][9] 2018 ஆம் ஆண்டில் இல்ங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 18 இல் சியால்கோட்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் 20 ஓட்டங்களை எடுத்து உதானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார் இந்தப் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகள்

[தொகு]

2017 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 15 இல் கிம்பர்லியில் இலங்கைத் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 5 ஓவர்கள் வீசி 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[10][11] இதே ஆண்டில் அக்டோபர் 29 இல் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் வீசிய ஒரு ஓவரில் டேவிட் மில்லர் தொடர்ச்சியாக 5 ஆறு ஓட்டங்கள் அடித்தார்.[12]

அக்டோபர் 21, 2018 இல் மிர்புர், சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 68 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.

சான்றுகள்

[தொகு]
 1. "Mohammad Saifuddin". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
 2. "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் July 9, 2015.
 3. "Mehedi Hasan to lead Bangladesh at U19 WC". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
 4. "Bangladesh Premier League, 11th Match: Comilla Victorians v Khulna Titans at Dhaka, Nov 13, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
 5. "Dhaka Premier Division Cricket League, 2017/18: Shinepukur Cricket Club". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
 6. "Liton Das hits 274 to close off BCL season". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
 7. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "Uncapped Mohammad Saifuddin in Bangladesh T20I squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
 9. "Bangladesh tour of Sri Lanka, 1st T20I: Sri Lanka v Bangladesh at Colombo (RPS), Apr 4, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
 10. "Saifuddin earns first ODI call-up for Bangladesh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
 11. "1st ODI, Bangladesh tour of South Africa at Kimberley, Oct 15 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
 12. http://www.espncricinfo.com/series/10904/scorecard/1075508/South-Africa-vs-Bangladesh-2nd-T20I/
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சைபுதீன்&oldid=3530589" இலிருந்து மீள்விக்கப்பட்டது