முகமது சாரிப் (சமூக சேவகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது சாரிப்
பிறப்புஅயோத்தி, இந்தியா
மற்ற பெயர்கள்சாரிப் சச்சா
பணிமிதிவண்டி பழுது பார்ப்பவர், சமூக சேவகர்
விருதுகள்

சாரிப் சாச்சா என்று பிரபலமாக அழைக்கப்படும் முகமது சாரிப் (Mohammed Sharif) இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மிதிவண்டி பழுது பார்க்கும் ஒரு சமூக சேவராவார். 20000 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்ததற்காக இவர் அறியப்படுகிறார். [1] [2] சமூகப் பணிகளில் இவர் செய்த பங்களிப்புக்காக 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு தனது நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. [3]

சுயசரிதை[தொகு]

சாரிப்பின் மூத்த மகன் முகமது ரைசு கான் 1992 ல் சுல்தான்பூர் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டார். [4] அவரது உரிமை கோரப்படாத உடல் சாலையில் கிடந்ததால், அது விலங்குகளால் விழுங்கப்பட்டது. [5] இந்த சம்பவத்திற்குப் பிறகு, அடையாளம் தெரியாத இறந்த உடல்களின் இறுதி சடங்குகளை சாரிப் அடக்கம் செய்யத் தொடங்கினார். இவர் உரிமை கோரப்படாத உடல்களுக்காக காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், தொடர்வண்டி நிலையங்கள், சவக்கிடங்குகள் போன்ற இடங்களை பார்வையிடுகிறார். 72 மணி நேரம் யாரும் உரிமை கோராத பின்னரே சடலங்கள் இவரிடம் காவலர்களால் ஒப்படைக்கப்படுகின்றன. [5]

உரிமை கோரப்படாத ஒவ்வொரு உடலுக்கும் இவர், அவர்களின் மதத்தின் படி இறுதி சடங்குகளை செய்கிறார். பைசாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள 25,000 க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத உடல்களின் கடைசி சடங்குகளை இவர் செய்துள்ளார். [2] [6][7] இவர் பல முறை நிதி சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும், நன்கொடைகளை சேகரித்துக் கொண்டு, பின்னர் இறுதி சடங்குகளைச் செய்வதற்கான தனது நடவடிக்கைகளை மேற்கொண்டார். [2] ஸ்டார் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், ஈ டிவி தொலைக்காட்சியிலும், தூர்தர்ஷனின் தேசிய மற்றும் அனைத்து மாநில அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட ஓர் இந்திய அரட்டை நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியிலும் இவர் தோன்றினார். [8]

சமூகப் பணிகளில் பங்களித்ததற்காக இவருக்கு 2020 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[9][10]

குறிப்புகள்[தொகு]

  1. "Padma for Sharif Chacha: UP’s unsung hero". 26 January 2020. https://m.timesofindia.com/city/lucknow/padma-for-sharif-chacha-ups-unsung-hero/articleshow/73625761.cms. பார்த்த நாள்: 26 January 2020. 
  2. 2.0 2.1 2.2 "Ayodhya: Meet Padam Shri awardee Mohammad Sharif, who performed last rites of 25,000 unclaimed bodies". 26 January 2020. https://www.timesnownews.com/mirror-now/society/article/meet-padam-shri-winner-mohammad-sharif-who-performed-last-rites-of-25000-people/545031. பார்த்த நாள்: 26 January 2020. 
  3. "From Arun Jaitley to Karan Johar: Here's full list of Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri awardees 2020". 25 January 2020. https://www.deccanherald.com/national/from-arun-jaitley-to-karan-johar-heres-full-list-of-padma-vibhushan-padma-bhushan-padma-shri-awardees-2020-798169.html. பார்த்த நாள்: 26 January 2020. 
  4. "With no Religious Bias, Mohd Sharif Has Cremated 25000 Unclaimed Bodies". 27 February 2017. https://www.news18.com/news/india/with-no-religious-bias-mohd-sharif-has-cremated-25000-unclaimed-bodies-1353740.html. பார்த்த நாள்: 26 January 2020. 
  5. 5.0 5.1 "Padma for Sharif Chacha: UP’s unsung hero". 26 January 2020. https://m.timesofindia.com/city/lucknow/padma-for-sharif-chacha-ups-unsung-hero/articleshow/73625761.cms. பார்த்த நாள்: 26 January 2020. 
  6. "Muslim bhajan singer, ‘Langar Baba’, Sundarban doctor among Padma award winners". 26 January 2020. https://m.timesofindia.com/india/padma-award-2020-muslim-bhajan-singer-langar-baba-sundarban-doctor-among-padma-award-winners/articleshow/73617764.cms. பார்த்த நாள்: 26 January 2020. 
  7. "Republic Day 2020: Unsung heroes in Padma Shri award list". 26 January 2020. https://www.deccanherald.com/national/republic-day-2020-unsung-heroes-in-padma-shri-award-list-798149.html. பார்த்த நாள்: 26 January 2020. 
  8. "Sharif Chacha's Padma has special significance". 26 January 2020. https://www.outlookindia.com/newsscroll/sharif-chachas-padma-has-special-significance/1718032. 
  9. "Full list of 2020 Padma awardees". 26 January 2020. https://www.thehindu.com/news/national/full-list-of-2020-padma-awardees/article30656841.ece. பார்த்த நாள்: 26 January 2020. 
  10. "Padma Awards announced; posthumous honour for Arun Jaitley, Sushma Swaraj". 26 January 2020. https://m.timesofindia.com/india/padma-awards-announced-posthumous-honour-for-arun-jaitley-sushma-swaraj/articleshow/73616751.cms. பார்த்த நாள்: 26 January 2020.