உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது அபீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது அபீப்
Mohammad Habib
பிறப்பு1895 (1895)
இறப்பு1971 (அகவை 75–76)
தேசியம்இந்தியர்
வாழ்க்கைத்
துணை
சோஹைலா அபீப்
பிள்ளைகள்இர்பன் அபீப்
உறவினர்கள்see Tyabji family, Abbas Tyabji (மாமனார்)
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்எம்.ஏ.ஓ கல்லூரி
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட மாணவர்கள்Syed Anwarul Haq Haqqi

முகமது அபீப் (Mohammad Habib, 1895-1971) என்பவர் ஒரு இந்திய வரலாற்றாளர் ஆவார். இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர் காந்தி, ஜவகர்லால் நேரு இருவருடனும் ஒரு கூட்டாளியாக இருந்தார்.

இவர் 1967 இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இவர் வி. வி. கிரியிடம் தோல்வியடைந்தார். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அபீப் 28.55% வாக்குகளைப் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

அபீப் லக்னோவில் வழக்கறிஞராக இருந்த முகமது நசீமின் என்பவரின் மகனாக பிறந்தார். இவரது மனைவி சோகைலா தியாப்ஜி மகாத்மா காந்தியின் குறிப்பிடத்தக்க சீடரான அப்பாஸ் தியாப்ஜியின் மகள் ஆவார். [1] இவர்களது மகன்களான கமல் அபீப், இர்பன் அபீப் ஆகியோராவர். இவர்கள் அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறை தகைமைப் பேராசிரியராக உள்ளனர். [2] [3]

அபீப் முகமது ஆங்கிலோ ஓரியன்டல் பள்ளி மற்றும் கல்லூரியில் (தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்) படித்தார். 1916இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் இளங்கலை தேர்வில் முதலிடம் பெற்றார். முகமது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கபட்டது. அதன் பின்னர் உயர் படிப்பிற்காக ஆக்ஸ்போர்டில் உள்ள புதிய கல்லூரிக்குச் சென்றார். இவர் ஒரு முறை ஆக்ஸ்போர்டு மஜ்லிஸின் தலைவராக இருந்தார். [4]

ஆக்ஸ்போர்டில் தான் இவர் தேசியவாதத்தில் மீது பற்று கொண்டார். இவரது தாராளவாத எண்ணம் கொண்ட ஆசிரியரான எர்னஸ்ட் பார்கரின் கருத்துக்கள், சரோஜினி நாயுடுவுடனான சந்திப்பு மேலும் இவர் இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் லண்டனுக்குச் சென்ற மௌலானா முகமது அலியின் அனுசரணை ஆகியவை அவரது சிந்தனையை வடிவமைத்தன. முகமது அலியின் அழைப்பின் பேரில், இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் கற்பிப்பதற்காக இந்தியா திரும்பினார். ஆனால் வெளிப்படையாக அதன் ஊழியர்களில் ஒருவராக இருக்கவில்லை. 1922 இல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டபோது, புதிதாக சலுகை பெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நியமனம் பெற்றார். [4]

தொழில்

[தொகு]

1926 இல், இவர் ( சுயாட்சிக் கட்சி ) உ.பி.யின் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜவகர்லால் நேருவைப் போற்றிய இவர், தனது வருமானத்தில் கணிசமான பகுதியை காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.[சான்று தேவை]

அலிகாரில், அபீப் பல வழிகளில் தனது முத்திரையைப் பதித்தார். ஒரு கல்வியாளராக, அசல் சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதுவதில் இவரது பங்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் இவர் அரச மரபுகள் அல்லது ஆட்சியாளர்கள் போன்வற்றைத் தவிர வரலாற்றின் பிற அம்சங்களைப் படிக்க ஊக்குவித்தார். அவரே சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை எழுதினார்.

நாற்பதுகளில், மார்க்சியத்தின் மீது இவருக்கு ஆர்வம் அதிகரித்தது. 1952 ஆம் ஆண்டில், எலியட், டவ்சன் ஆகியோரின் தி ஹிஸ்டரி ஆஃப் இந்தியா இரண்டாம் தொகுதி மறுபதிப்பில் இவர் குறிப்பிட்டத்தகவாறு அறிமுகத்தை வழங்கினார். இடைக்கால இந்தியா மார்க்சியக் கருத்துக்களால் ஆழமாகப் பாதிக்கப்பட்டது. ஐ.நா பொதுச் சபையில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த இவர் பாரிசுக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து மக்கள் சீனக் குடியரசுக்கான முதல் நல்லெண்ணப் பயணத்தில் 1952 இல் பீக்கிங்கிற்கு (இப்போது பெய்ஜிங்) பயணம் செய்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற இவரது நம்பிக்கையை இரு பயணங்களும் பலப்படுத்தியது.

ஓய்வுக்குப் பின்

[தொகு]

இவர் 1967 இல் இந்தியாக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். [5]

இறப்பு

[தொகு]

இவர் 1971 இல் இறந்தார்.

மரபு

[தொகு]

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஒரு கட்டடத்துக்கு முகமது ஹபீப் ஹால் என 1972 இல் இவரது பெயரிடப்பட்டது. இதில் சக்ரவர்த்தி விடுதி, உமருதீன் விடுதி ஐதர் கான் விடுதி என மூன்று விடுதிகள் உள்ளன. [6]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

[தொகு]
  • A Comprehensive History of India: The Delhi Sultanate (A.D. 1206-1526) (general editor with K. A. Nizami)
  • Hazrat Amir Khusrau of Delhi. 1st Pakistan ed. Lahore : Islamic Book Service [1979].
  • Hazrat Nizamuddin Auliya: hayat aur talimat.Dihli : Shubah-yi Urdu, Dihli Yunivarsiti, [1972] University of Delhi. Dept. of Urdu. Silsilah-i matbuat-i Shubah-yi Urdu [1970].
  • The political theory of the Delhi sultanate (including a translation of Ziauddin Barani's Fatawa-i Jahandari, ...) Allahabad, Kitab Mahal [1961].
  • Politics and society during the early medieval period: collected works of Professor Mohammad Habib / edited by Khaliq Ahmad Nizami. New Delhi : People's Pub. House [1974–1981].
  • Some aspects of the foundation of the Delhi Sultanat [sic]. Delhi, Dr. K. M. Ashraf Memorial Committee; [sole distributors: Kalamkar Cooperative, 1968] Dr. K. M. Ashraf memorial lecture, 1966
  • Sultan Mahmud of Ghaznin. 2d ed.Delhi, S. Chand [1967].

குறிப்புகள்

[தொகு]
  1. Obituary of Sohaila Habib in The Hindu, December 24, 2002
  2. AMU confers emeritus status on Irfan Habib
  3. Nauriya, Anil (24 December 2002). "Memories of another Gujarat". தி இந்து. http://www.thehindu.com/2002/12/24/stories/2002122400941000.htm. பார்த்த நாள்: 5 September 2014. 
  4. 4.0 4.1 "Mohammad Habib - Aligarh Movement" பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2015-03-09.
  5. Dr.zakir Hussain:quest for Truth, By Dr. Z. H. Faruqi
  6. "MOHAMMAD HABIB HALL". Archived from the original on 21 October 2007. பார்க்கப்பட்ட நாள் 22 January 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அபீப்&oldid=4110165" இலிருந்து மீள்விக்கப்பட்டது