மீள்பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீள்பார்வை பத்திரிகை 1995 டிசம்பர் முதல் இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வெளிவருகிறது. ஆரம்பத்தில் மாதம் ஒருமுறை வெளிவந்த இவ்விதழ், 2007 ஜூலை முதல் மாதம் இருமுறை வெளிவருகிறது.

மாற்றுச் சிந்தனையையும் புதிய அணுகுமுறையிலான முன்வைப்பையும் பின்பற்றி வரும் மீள்பார்வை, கடந்த 15 வருடங்களாக ஊடகத் தளத்தில் உயிர்ப்புடன் உலா வருகிறது.

மீள்பார்வை ஊடக மையத்தினால் பயணம், சர்வதேசப் பார்வை, வைகறை ஆகிய காலாண்டு இதழ்களும் வெளியிடப்படுகின்றன. பல நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மீள்பார்வை ஊடக மையத்தின் இலத்திரனியல் ஊடகப் பிரிவு இணையம், இறுவட்டுகள், காணொளிகள் உள்ளிட்ட பல வெளியீடுகளை வெளியிட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீள்பார்வை&oldid=872340" இருந்து மீள்விக்கப்பட்டது