மீள்பயன்பாட்டு பொருள் பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு மீள்பயன்பாட்டுப் பை

மீள்பயன்பாட்டுப் பொருள் பை (Reusable shopping bag) என்பது பெருட்களை எடுத்துச்செல்ல மீண்டும் மீண்டும் பயன்படும் பைகள் ஆகும்.

தேவை[தொகு]

மேற்கு நாடுகளில் பல காலமாக பொருட்களை வாங்கும் பொழுது இலவசமாக நெகிழிப் பைகள் வழங்கும் வழக்கம் இருந்தது. இது ஒரு பெரும் குப்பைப் பிரச்சினையை தேற்றுவித்தது. இந்நெகிழிப் பைகள் இலகுவில் மக்காதவை. இதனால் சூழலுக்கு நெடுங்காலத்துக்கு கேடு என்றும், தேவையற்ற செலவு என்றும் உணரப்பட்டது. இக்காரணங்களால் நெகிழிப் பைகளுக்கு பதிலாக மீள்பயன்பாட்டுப் பைகளைப் பயன்படுத்த நுகர்வோரை ஊக்குவிக்கின்றனர்.

பைகளின் தன்மை[தொகு]

மீள்பயன்பாட்டுப் பைகள் நெகிழிப் பைகளை விட பெரிதாகவும் உறுதியான பொருட்களாலும் உருவாக்கப்படுகிறன. பெரும்பாலானவை மீள்பயன்பாட்டு மூலப்பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. நெகிழிப் பை ஒன்றை விட 10 முதல் 50 மடங்கு விலை கூடியவை. ஆனால், இவற்றை நீண்ட காலத்துக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

நாடுகள் வாரியாக மீள்பயன்பாட்டுப் பைகள்[தொகு]

  • கனடாவில் உள்ள ரொன்றரோ மாநகரில் நெகிழிப் பைகளை இலவசமாக வழங்குவதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மேலும் மீள்பயன்பாட்டுப் பைகளை பயன்படுத்த நுகர்வோர் பெரிது ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  • ஐக்கிய இராச்சியத்தில் இப் பைகள் வாழ்நாள் பைகள் அல்லது Bag for Life என அறியப்படுகின்றன. [1][2]
  • ஆஸ்திரேலியாவில் இப் பைகள் பச்சைப் பைகள் அல்லது Green Bags என அறியப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bag-for-life 'bug risk' advice". BBC News. http://www.bbc.co.uk/news/health-30176505. பார்த்த நாள்: 1 October 2015. 
  2. "How can plastic bag addiction be cured?". BBC News. http://www.bbc.co.uk/news/magazine-34401851. பார்த்த நாள்: 1 October 2015.