மெரியாம் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீரியாம் மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மெரியாம் மக்கள் (Meriam people) எனப்படுவோர் ஆஸ்திரேலியாவின் வடமுனையில் அமைந்துள்ள டொரெஸ் நீரிணைத் தீவுகளின் கிழக்குத் தீவுகளில் ஒன்றான மெர் எனப்படும் மறி தீவில் வாழும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் ஆவர்.

மெரியாம் மக்கள் 1992 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து பெரிதும் பேசப்பட்டனர். எடி மாபோ என்பவர் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இத்தீர்ப்பை அடுத்து ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் அவர்களுக்கே உரியது என அங்கீகரிக்கப்பட்டது.

மெரியாம் மக்கள் பொதுவாக தோட்டக் கலையையே தமது தொழிலாகக் கொண்டிருந்தாலும், அனைத்து மெரியாம் மக்களும் கடல் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். தீவுகளில் 60 கிமீகள் வடக்கேயும் மேற்கேயும் மீன்பிடித் தொழிலை தமது உரிமைகளாக வைத்திருக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரியாம்_மக்கள்&oldid=1453436" இருந்து மீள்விக்கப்பட்டது