மீரா சன்யால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீரா சன்யால் (Meera Sanyal; 15 அக்டோபர் 1961 - 11 ஜனவரி 2019) ஓர் இந்திய வங்கியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவில் இசுக்காட்லாந்தின் ராயல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராக பணியாற்றினார். கப்பல்படை அதிகாரியும் , துணை கடறப்டை அதிகாரியான குலாப் மோகன்லால் ஹிரனண்டனியின் மகள் ஆவார்.இவர் ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்கு முன்பாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியில் பணி செய்துள்ளார் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெற்கு மும்பையில் வேட்பாளராக களம் இறங்கினார். அந்தத் தேர்தலில் இவர் தோல்வியினைத் தழுவினார். முன்னதாக இவர் மும்பை தெற்கு தொகுதியில் இருந்து 2009 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

இவர் இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனமான பிரதான் குழுவில் பணியாற்றினார், இது தொழில்முனைவு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் . சர்வதேச விளையாட்டு உரிமை வாரியத்தின் மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் உதவினார். இவர் ஜெய் ஹிந்த் கல்லூரி மற்றும் இந்திய லிபரல் குழுமத்தின் குழுவில் இருந்தார். [1] இவர் சிஐஐ மற்றும் எஃப்ஐசிசிஐயில் பல்வேறு தேசிய குழுக்களில் உறுப்பினராக இருந்தார். இவர் உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான AIESEC இன் இந்திய ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். சன்யால்11 ஜனவரி 2019 அன்று புற்றுநோயால் இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சன்யால் இந்திய கடற்படை அதிகாரி குலாப் மோகன்லால் ஹிரானந்தனி மற்றும் அவரது மனைவி பானு ஹிரானந்தனி ஆகியோருக்கு 1961 இல் மகளாகப் பிறந்தார். இவரது குடும்பம் இந்தியப் பிரிவினையின்போது சிந்துவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஒரு சிந்தி குடும்பம் ஆகும். 1971 இந்திய-பாக்கித்தான் போரின் போது பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த கடற்படை தாக்குதலில், அவரது தந்தை திரிசூலம் படைநடவடிக்கையின் முக்கிய நபராக இருந்தார். [2]

சன்யால் வனிகப் பிரிவில் இளங்கலைப் பட்டத்தினை மும்பையில் உள்ள சைடென்ஹாம் கல்லூரியிலும் [3] 1982 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள இன்சியட் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[4] இவர் 2006 ஆர்வர்டு தொழிற்பள்ளியில் ஆறு வார மேம்பட்ட மேலாண்மை திட்டத்தில் கலந்து கொண்டார். இவர் இலண்டனைச் சேர்ந்த பட்டயதாரர்களின் பட்டய நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். [5]

தொழில்முறை மற்றும் பொது வாழ்க்கை[தொகு]

30 வருட வங்கி வாழ்க்கைக்குப் பிறகு, பொது சேவையில் கவனம் செலுத்துவதற்காக ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் பதவியில் இருந்து சன்யால் விலகினார். [6] வங்கியில் இருந்த காலத்தில், இவர் இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் 650,000 பெண்களுக்கு நிதியளித்த குறு நிதித் திட்டத்திற்கு வழிகாட்டினார். வங்கியின் அறக்கட்டளைக்கு இவர் தலைமை தாங்கினார், அச்சுறுத்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்த 75,000 பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கினார். [7] அவரது வங்கி வாழ்க்கை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறப்பிக்கப்பட்டது. இவர் வணிக நிதி நிறுவனத்தின் தலைவராகவும் பின்னர் ஆசியாவில் ஏபிஎன் அம்ரோவின் தலைமை செயற்குழு அதிகாரியாகவும் இருந்தார்.

சன்யால் பிரதானின் வாரிய உறுப்பினராக இருந்தார், [8] [9] விளையாட்டு உரிமையின் சர்வதேச வாரியத்தின் உறுப்பினராக இருந்தார், இது உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும், இது விளையாட்டின் மாற்றும் சக்தியைப் பயன்படுத்தி, சிக்கல்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிக்கிறது. இவர் நல்லாட்சிக்கான லிபரல்ஸ் இந்தியாவின் நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. Talk on Governance by Meera Sanyal, Former Country Head of RBS பரணிடப்பட்டது 29 மே 2014 at the வந்தவழி இயந்திரம், CPPR
  2. "Vice-Admiral Hiranandani cremated with full Naval honours". http://www.thehindu.com/news/states/kerala/article14650.ece. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Meera Sanyal". Meera Sanyal. 22 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Subramanyam, Chitra; Ahmed, Bushra; Malhotra, Purvi; Khatri, Deepika (4 June 2008). "Iron maidens". India Today (ஆங்கிலம்). 13 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Meera Sanyal | Prominent Indian Women Executives | India Business Women". Amritt, Inc. (ஆங்கிலம்). 2019-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Meera Sanyal to quit Royal Bank of Scotland for a full-time career in politics". http://articles.economictimes.indiatimes.com/2013-04-10/news/38434030_1_milind-deora-mecklai-financial-services-south-mumbai. 
  7. "Meera Sanyal Interview- Globalinvesther". 20 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  8. "Meera Sanyal on Pradan board". Pradan. 31 January 2014. 23 April 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Meera Sanyal, Former Banker And AAP Leader, Dies At 57". Outlook (India). 2019-07-06. 2019-07-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_சன்யால்&oldid=3351266" இருந்து மீள்விக்கப்பட்டது