மீரா கண்ணா
மீரா கண்ணா | |
|---|---|
| படித்த கல்வி நிறுவனங்கள் | தில்லி பல்கலைக்கழகம் (முதுகலை) |
| பணி | எழுத்தாளர், கவிஞர், பெண்ணியவாதி |
மீரா கண்ணா (Meera Khanna) ஓர் இந்திய எழுத்தாளரும், கவிஞரும் பாலின உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் வி. மோகினி கிரி நிறுவிய சேவா சமாஜம் நிறுவன அறங்காவலராகவும் நிர்வாக துணைத் தலைவராகவும் உள்ளார்.[1] "தி லாஸ்ட் வுமன் ஃபர்ஸ்ட்" என்ற உலகளாவிய கூட்டமைப்பினை இவர் வழிநடத்தினார்.[2] கண்ணா, ஒவ்வொரு பெண் கூட்டமைப்பின் இணை நிறுவனரும் தெற்காசியப் பிரிவுத் தலைவராகவும் உள்ளார்.
கல்வி
[தொகு]கண்ணா தனது பள்ளிப் படிப்பை இந்தியாவின் புனேவிலும் பிரோசுபூரிலும் முடித்தார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
தொழில்
[தொகு]கண்ணா வளர்ச்சித் துறையில் பணியாற்றுகிறார். குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு குறித்து கவனம் செலுத்துகிறார். இவர் சேவை சங்கத்தின் அறங்காவலராகவும் நிர்வாக துணைத் தலைவராகவும் உள்ளார்.[1] இவரது தலைமையின் கீழ், சேவை சங்கம் தங்குமிடம் இல்லங்கள், திறன் மேம்பாடு, குடும்ப ஆலோசனை, உற்பத்தி மையங்கள், அத்துடன் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளிகளையும் நிறுவி நடத்தி வருகிறது. சேவா சமாஜம் நிறுவனம் தற்போது பிருந்தாவன், கோத்ரா, நாகப்பட்டினம், சிறிநகர் ஆகிய இடங்களில் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லங்களையும் நடத்தி வருகிறது. சிறிநகரிலும், காசுமீரின் பாரமுல்லாவிலும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான இல்லங்களை நிறுவி நடத்துவதற்கும் கண்ணா உதவினார்.
"தி லாஸ்ட் வுமன் ஃபர்ஸ்ட்" என்ற உலகளாவிய கூட்டமைப்பினைக் கண்ணா வழிநடத்துகிறார்.[2] இவர் ஒவ்வொரு பெண் கூட்டமைப்பின் இணை நிறுவனரும் தெற்காசிய விதவைகள் மேம்பாட்டுக்கான வலையமைப்பின் இயக்குநராகவும் உள்ளார். இவர் நவ்தன்யாவின் அறங்காவலராகவும், போர் விதவைகள் சங்கத்தின் ஆலோசகராகவும், இந்தியாவின் ஐ. நா. பெண்கள் அமைப்பின் கீழ் உள்ள குடிமைச் சமூக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் இந்திய அரசின் பெண்களின் நிலை குறித்த உயர் மட்டக் குழுவின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய மகளிர் ஆணையம், இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விதவைகள் குறித்த இரண்டு நிபுணர் குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தார்.[3][4]
தெற்காசியாவில் அமைதிக்கான பெண்கள் முன்முயற்சியின் நிறுவனர்-அறங்காவலராகவும் கண்ணா இருந்தார்.[5] இதன் மூலம் இவர் பாக்கித்தானுக்கு சென்ற பெண்கள் குழுவை வழிநடத்தினார். தெற்காசியப் பெண் எழுத்தாளர்கள், தெற்காசிய பெண் புகைப்படக் கலைஞர்களின் கண்காட்சி, தெற்காசிய நாடக விழாவான அமைதியினைக் கற்பனைச் செய்தல் எனும் ஒரு படைப்புப் பட்டறையை ஒருங்கிணைத்தார்.
ஐ. நா. நடவடிக்கைக்கான விதவைகள் குறித்த தீர்மானத்தையும் கண்ணா வரைவு செய்தார். இது ஐ. நா. மகளிர் அமைப்பின் முதல் துணைப் பொதுச் செயலாளரும் நிர்வாக இயக்குநருமான மிசெல் பாச்செலெட்டிடம் வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரித்தன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 42வது அமர்வில் (09/20/2019) கண்ணா ஒரு பேச்சாளராக இருந்தார். இங்கு நெருக்கடி மற்றும் மோதல்களில் விதவைகள் குழுவில் செயல்பட்டார்.[6] கண்ணா வி. மோகினி கிரியுடன் இணைந்து "நேர்மறை முதுமைக்கான மந்திரங்கள் (Mantras for Positive Ageing)" புத்தகத்தையும் தொகுத்துள்ளார். இந்தப் புத்தகத்திற்கு தலாய் லாமாவின் முன்னுரை எழுதியுள்ளார்.[7]
புத்தகங்கள்
[தொகு]- இப் தேர் வில் பி எ பாரடைசு -ஒரு சொர்க்கம் இருந்தால் (குல்சன் வெளியீடு, 2012)
- லிவ்விங் டெத்: தி டுருமா ஒஃப் விடோகுட் இன் இந்தியா-வாழும் மரணம்: இந்தியாவில் விதவையின் அதிர்ச்சி (கியான் வெளியீட்டு நிறுவனம், 2012)
- இன் எ இசுடேட்டு ஒஃப் வயலண்ட் பீசு. வன்முறை நிறைந்த அமைதியான நிலையில் (ஹார்பர் காலின்ஸ், 2015)
- பிரேக்கிங் பாத்ஸ் (நியோகி புக்ஸ், 2019)
- மந்த்ராசு பார் பாசிடிவ் ஏஜிங். நேர்மறை முதுமைக்கான மந்திரங்கள் (இணை ஆசிரியர், பிப்பா ரான் புக்ஸ் அண்ட் மீடியா, 2021)
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம் 2018ஆம் ஆண்டில் கண்ணாவுக்கு மகளிர் சாதனையாளர் விருதை வழங்கியது.[8] உலக அமைதிக்கான பெண்கள் கூட்டமைப்பு, 2019ஆம் ஆண்டுக்கான தனிநபர் அமைதிக்குள் அமைதியை வளர்ப்பதற்கான விருதை கண்ணாவுக்கு வழங்கியது.[9] பெண்கள் சவால்களைத் தாண்டி உயர்ந்து கட்டுப்பாடுகளை மீற ஊக்குவிக்கும் நோக்கில், ஐ. நா. பெண்கள் இந்தியாவின் முஜே ஹக் ஹை பிரச்சாரத்திலும் கண்ணா இடம்பெற்றார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Together we can!". Women's Network for Change (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-07-17. Retrieved 2022-08-02.
- 1 2 "Widows: Survivors of Conflict" (PDF). September 2020.
- ↑ "#65 FiLiA meets: Meera Khanna". FiLiA (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). April 2020. Retrieved 2022-08-02.
- ↑ "India's forgotten widows: Govt must move beyond laws and actions plans, focus on social security and rehabilitation". Firstpost (in ஆங்கிலம்). 2017-10-24. Retrieved 2022-08-02.
- ↑ Dipti Mayee Sahoo (January 2014). "An Analysis of Widowhood in India: A Global Perspective" (PDF).
- ↑ "Widows in Crisis & Conflict Panel – UN Human Rights Council 42 (09/20/2019)".
- ↑ "Fifty eminent Indians aged over 75 share their Mantras for Positive Ageing". www.thehansindia.com (in ஆங்கிலம்). 2021-10-02. Retrieved 2022-08-02.
- ↑ "Amity honors eminent "Women Achievers" during the conclusion of week-long celebrations of International Women's Day" (in அமெரிக்க ஆங்கிலம்). 11 March 2018. Retrieved 2022-08-02.
- ↑ "WFWP, International Participates in Annual UN Session on Women's Issues" (PDF).
- ↑ "UN Women inspire women to defy norms, rise above roadblocks through 'Mujhe haq hai' campaign". www.bestmediaifo.com. July 11, 2018. Retrieved 2022-08-02.
- ↑ Sharma, Garvita (2018-06-29). "Mithali Raj and Sania Mirza speak about gender equality at UN India Women's anthem launch". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-08-02.