மீயொலி நோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீயொலி வரிக் கண்ணோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு குழந்தையின் உள்ளுறுப்புக்களை இக்கருவி கொண்டு ஆராயும் காட்சி
ஒரு நாயின் இருதயத்திலுள்ள உறுப்பை ஆராய்தல்

மீயொலி வாருதல் அல்லது மீயொலி நோட்டம் (Ultra Sound Scan) என்பது ஹெர்ட்ஸ் முதல் ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணுக்கு மேற்பட்ட மீயொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை ஆராய உதவும் கருவியாகும்.

செயல்பாடு[தொகு]

கடலின் ஆழத்தைக் காண்பதற்குப் பயன்படும் "சோனார்" (Sonar) கருவி போலவே இதுவும் செயல்படுகிறது. உடலில் ஆராய வேண்டிய பகுதியில் உள்ள தோலின் மீது கூழ்ம நிலையிலுள்ள பிசின் தடவப்படுகிறது. அப்பகுதியின் மேற்பரப்பில் இருந்து மீயொலிகள் பரப்பப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட மீயொலிகளை கணிப்பொறியின் கண்காட்சி அலகில் காணலாம். அவை இருபரிமாண படிமங்களாகும்.

இரத்த ஓட்டத்தை டாப்ளர் விளைவு தத்துவத்தின்படி மீயொலிகளைப் பயன்படுத்திக் காணலாம். சாதனத்தை நோக்கி இரத்தம் வரும்பொழுது நீல நிறமாகவும், விட்டு விலகும்போது சிவப்பு வண்ணமாகவும் தோன்றும்.

இம்முறை மிகவும் பாதுகாப்பானதாகும். மேலும் நோயாளிகளே நேரடியாகப் பிம்பங்களைத் திரையில் கானலாம்.

பயன்படுத்தப்படும் பகுதிகள்[தொகு]

கருவிலுள்ள குழந்தையின் நிலையை அறியவும், கல்லீரல், கணையம், இதயம், மற்றும் இரத்த நாளங்களில் உள்ள இரத்த ஓட்டம் ஆகியவற்றை ஆராயவும் பயன்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீயொலி_நோட்டம்&oldid=2213568" இருந்து மீள்விக்கப்பட்டது