மீன் வள்ளம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீன் வள்ளம் அருவி

மீன் வள்ளம் அருவி (Meenvallam Waterfalls) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அருவி ஆகும். தே. நெ. 213 இல் உள்ள பாலக்காடு-மனர்காடு பாதையில் உள்ள துப்புநாடு சந்திப்பில் இருந்து காடுகளுக்குள் 8 கி.மீ தொலைவில் இந்த அருவி உள்ளது.

மூன்று மெகா வாட் திறன் கொண்ட ஒரு சிறிய நீர் மின் ஆற்றல் திட்டத்தை மீன்வள்ளத்தில் பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்தால் கட்டப்பட்டுள்ளது. அருவியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் பாலக்காடு வனப் பிரிவில் உள்ள ஒலவக்கோடு மலைத்தொடரின் துடிக்கோட் வான சமரக்ஷன சமதியால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அருவியைச் சுற்றியுள்ள காடுகள் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் விரிவாக்கமாகும். இந்த அருவி பாலக்காட்டில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், மன்னர்க்காட்டில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. https://www.keralatourism.org/destination/meenvallam-waterfalls-palakkad/554
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_வள்ளம்_அருவி&oldid=3030974" இருந்து மீள்விக்கப்பட்டது