மீன்கள் வலசை போதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீன்கள் வலசை போதல்[தொகு]

அறிமுகம்[தொகு]

  ஒரு விலங்கு தனக்கு வேண்டிய உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் தன் இருப்பிடத்திலிருந்து மற்றொரு இருப்பிடத்திற்கு சென்று வருவதை வலசை போதல் என்கிறோம். மீன்களும் பறவைகள் போன்று வெவ்வேறு காலங்களில் வலசை போகின்றன.

மீன்கள் வலசை போதலுக்கான காரணங்கள்:[தொகு]

1. உணவு பெறுவதற்காக. 2. முட்டையிடுவதற்காக. 3. சாதகமான வெப்பம், ஒளி போன்றனவற்றை அடைவதற்காக. 4. இரத்த அழுத்தம் சீராக வைப்பதற்காக. 5. சாதகமான நன்னீா் அல்லது உவா்நீா் பகுதி அடைதலுக்காக.

வலசை போதலின் வகைகள்:[தொகு]

  சில மீன்கள் வசந்த காலத்தில் வடக்கேயும், இலையுதிா் காலத்தில் தெற்கேயும் கிடைமட்டத்தில் வலசை போகின்றன. (எ. கா)கத்திமீன்.
  ஆழ்மட்டத்தில் வாழும் சில மீன்கள் நாள்தோறும் மேலும் கீழுமாக வலசை போகின்றன.
  சில மீன்கள் நன்னீாிலிருந்து கடல்நீா் நோக்கி வலசை போகன்றன. இதற்கு கடல்நோக்கு மீன்கள் எனப்படும். (எ. கா.) விலாங்கு மீன்கள்
  சில மீன்கள் இதற்கு நோ்மாறாக கடல்நீாிலிருந்து நன்னீா் நோக்கி இடம்பெயா்கின்றன. இதற்கு ஆற்றுநோக்கு மீன்கள் எனப்படும். (எ. கா) ஆங்குல்லா, சால்மன்

மேற்கோள்[தொகு]

Chordate zoology by E.L.jordan , Dr.P.S.Verma

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்கள்_வலசை_போதல்&oldid=2366740" இருந்து மீள்விக்கப்பட்டது