மீன்கரா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீன்கரா அணை (Meenkara Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், பாரதப்புழா ஆற்றில் கலக்கும் காயத்திரி ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள அணை ஆகும். இது பாலக்காட்டிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை 1964 ஆம் ஆண்டு கட்டபட்டது.

இதன் அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள பாலக்காடு நகர தொடருந்து நிலையம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் சுமார் 78 கி.மீ. தொலைவில் உள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. https://www.keralatourism.org/destination/meenkara-dam-palakkad/511
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்கரா_அணை&oldid=3030851" இருந்து மீள்விக்கப்பட்டது