மீனா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா சர்மா
பிறப்பு1984கள்[1]
தேசியம் இந்தியா
பணிஊடகவிய்லாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அறியப்படுவதுபுலனாய்வு பத்திரிகையாளர்

முனைவர் மீனா சர்மா (Meena Sharma) (பிறப்பு:1984கள்) இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது பெற்றார். வயதான பெற்றோரை கவனிக்காத குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையை பிரசவிப்பதாக கணிக்கப்பட்ட கர்ப்பங்களில் அதிக எண்ணிக்கையிலான கருக்கலைப்புகளையும் இவர் அடையாளம் கண்டுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இவர் பத்ரிக்கா தொலைக்காட்சியில் ஆசிரியராகவும், "நாயிகா" நிகழ்ச்சியில் ஜீ நியூஸின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நியூஸ் 18 இல் இவர் "தேஷ் கி பாத்" மற்றும் "டாக்டர் மீனா சர்மா கே சாத்" ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.[2]

முனைவர் மீனா சர்மாவுக்கு “நாரி சக்தி விருது” வழங்கும் பிரணப் முகர்ஜி

2016 ஆம் ஆண்டில் அனைத்துலக பெண்கள் நாள் அன்று நாரி சக்தி விருது பெற இவர் தேர்வு செய்யப்பட்டு [3] புதுதிடில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வழங்கினார். முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோதியும் இவர் முன்னிலைப்படுத்திய ஒரு சிக்கலான சில பெற்றோர்கள் தங்களின் குழந்தை பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதால் அதிக எண்ணிக்கையிலான ஆண் குழந்தைகளின் பிரச்சினையை குறித்து உரை நிகழ்த்தினர்.

2007 ஆம் ஆண்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன்புரி சட்டத்தை உருவாக்க இவர் செய்த உதவியை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது. இந்த சட்டம் வயதானவர்களின் பராமரிப்பிற்கு பணம் செலுத்துவதற்கு வாரிசுகளுக்கு சட்டபூர்வமாக பொறுப்பேற்க வைக்கிறது. ஆறு இந்திய மாநிலங்களில் 500 அமைப்புகள் எவ்வாறு பாலியல் தீர்மானத்தை வழங்குகின்றன என்பதையும், சட்டவிரோத பாலின நிர்ணயிக்கப்பட்ட கருக்கலைப்புகளையும் இவர் பல்வேறுபட்ட நடவடிக்கையில் வெளிப்படுத்தினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meena Sharma , a 26-year-old freelance journalist, and Shripal..." Getty Images (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  2. "Meena Sharma - Jaipur Literature Festival". jaipurliteraturefestival.org/ (in ஆங்கிலம்). 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  3. "Meena Sharma - Jaipur Literature Festival". jaipurliteraturefestival.org/ (in ஆங்கிலம்). 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08."Meena Sharma - Jaipur Literature Festival". https://jaipurliteraturefestival.org/. 2013-09-17.
  4. "Citation for Nari Shakti Puraskar". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_சர்மா&oldid=3480123" இலிருந்து மீள்விக்கப்பட்டது