மீனா கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீனா கபூர் (Meena Kapoor) (1930 கொல்கத்தா (அப்போது கல்கத்தா) - 23 நவம்பர் 2017) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் நியூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் பணியாற்றிய நடிகர் பிக்ரம் கபூரின் மகள் ஆவார். இவரது குடும்பம் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிசி பருவாவுடன் தொடர்புடையது. மீனாவின் பாடும் திறனை நினு மஜும்தார் மற்றும் எஸ். டி. பர்மன் போன்ற இசையமைப்பாளர்கள் இளம் வயதிலேயே கணித்துள்ளனர். 1940கள் மற்றும் 1950களில் இந்தி சினிமாவில் பின்னணிப் பாடகியாக இருந்த இவர், பர்தேசி (1957), ஏக் தர்தி ஹை ஏக் ககன் (1954) மற்றும் கச்சி ஹை உமரியா போன்ற வெற்றிப் பாடல்களைப் பாடினார். சார் தில் சார் ரஹேன் (1959) மீனாகுமாரியால் படமாக்கப்பட்டது . இவர் பாடகி கீதா தத்தின் தோழியாவார். இருவரின் குரலும் ஒரே மாதிரியான பாணியைக் கொண்டிருக்கும்.[2]

கபூர் 1959-ல் இசையமைப்பாளர் அனில் பிசுவாசை மணந்தார், பின்னர் இவர் இந்தி சினிமாவை விட்டு விலகி தில்லியில் குடியேறினார். தில்லியில், மார்ச் 1963-ல் அனைத்திந்திய வானொலியில் தேசிய இசைக்குழுவின் இயக்குநரானார்.[3] அனில் பிசுவாசு மே 2003-ல் தில்லியில் இறந்தார். இந்த இணையருக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் அனில் பிசுவாசின் முதல் மனைவி அஷாலதா பிசுவாசுக்கு 4 குழந்தைகள் இருந்தனர்.

கபூரின் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று "ஆனா மேரி ஜான் சண்டே கே சண்டே" என்பதாகும். இது ஷெஹ்னாய் (1947) திரைப்படத்திலிருந்து சி. ராம்சந்திரா மற்றும் சம்சாத் பேகம் பாடிய காதல் பாடல் ஆகும். அனில் பிசுவாசு இசையமைத்த "குச் அவுர் ஜமானா கெஹ்தா ஹைன்". சோட்டி சோட்டி பாடின் (1965) படப் பாடலாகும்.

திரைப்படவியல்[தொகு]

  • ஆகோஷ்
  • துகியாரி
  • ஹரிதர்ஷன்
  • கோபிநாத்
  • ஆகாஷ்
  • நைனா
  • உஷா கிரண்
  • கதவு சாலன்
  • சோடி சோட்டி பாடேன்
  • சால்டே சால்டே
  • பர்தேசி (1957)
  • நா இல்லு (1953)
  • காயல் (1951)
  • ஆதி ராத் (1950)
  • அனோகா பியார் (1948)
  • கர் கி இஸத் (1948)
  • நை ரீட் (1948)
  • ஷெஹ்னாய் (1947)

இறப்பு[தொகு]

மூத்த பாடகரான கபூர் 23 நவம்பர் 2017 அன்று கொல்கத்தாவில் அதிகாலை 2:20 மணிக்கு இறந்தார். இறப்பதற்கு சில வருடங்களாக பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Singer Meena Kapoor passes away". The India Times. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  2. "Geeta Dutt – Musical Association with Meena Kapoor". பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
  3. Anil Biswas, 89, Whose Music Used Orchestras in Indian Films New York Times, 4 June 2003.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_கபூர்&oldid=3848065" இலிருந்து மீள்விக்கப்பட்டது