மீனாட்சி வாத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி வாத்வா
தேசியம்அமெரிக்கர்
துறைகோள் அறிவியல்
கல்வி கற்ற இடங்கள்வாசிங்டன் பல்கலைக்கழகம், புனித உலூயிசு
பஞ்சாப் பல்கலைக்கழகம்

மீனாட்சி வாத்வா (Meenakshi Wadhwa) ஓர் இந்திய அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்கல் ஆய்வு மைய இயக்குநராகவும் புவி, விண்வெளித் தேட்டப் பள்ளியில் பேராசிரியராகவும் உள்ளார். இவர் சிகாகோ கள அருங்காட்சியக ஆய்வு இணையரும் ஆவார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

மீனாட்சி வாத்வா 1994 இல் புவி,கோள் அறிவியல் புலங்களில் புனித உலூயிசு வாழ்சிங்டன் பலகலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆராய்ச்சி விண்கற்கள் நிலாக் கற்களின் ஆய்வூடாக சூரியக் குடும்பம், கோள்களின் தோற்றத்தையும் படிமலர்ச்சியையும் பயில்கிறது. மேலும் இந்த ஆய்வுக்கு இவர் விண்கலத் திட்டங்கள் தரும் பிற புவிப்புறத் தகவல்களையும் பயன்கொள்கிறது. இவர் 2002-03, 2012-13 ஆகிய கள ஆய்வின் இருபருவங்களில் அண்டார்ட்டிகா விண்கற்கள் தேட்டத் திட்டத்தின்கீழ் அண்டார்ட்டிகா விண்கற்கள் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளார். அரிசோனா மாநிலப் பல்கலைக்கழக விண்கற்கள் மையத்தின் இயக்குநராக, வாத்வா பல்கலைக்கழகம் சார்ந்த பாரிய விண்கற்கள் திரட்டலையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.[1] இவர் பல்வேறு ஆராய்ச்சி, கல்விசார் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் தம் வாழ்வில் செனிசிசு விண்கலம், செவ்வாய் அறிவியல் ஆய்வகம் போன்ற நாசாவின் பல கோள்தேட்ட அறிவியல் குழுக்களில் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். இவர் நாசாவின் 2010 ஆம் ஆண்டைய கண்டுபிடிப்புத் திட்ட்த்தின் கீழ் செவ்வாய் ஆய்வுப் பதக்கூறுகள் திரட்டல் முதன்மை ஆய்வாளர் ஆவார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 2015 இல் கல்வி, தொழில்முறை சிறப்புத் தகைமைக்கான புல்பிரைட்-நேரு ஆய்வுநல்கையைப் பெற்றுள்ளார். இவர் 2012 இல் அறிவியல் தேட்டக் கழக ஆய்வளர் ஆனார். 2007 இல் உலகத் தேடல் சிறகத்தில் சேர்ந்தார். 2006 இல் விண்கள் கழகத்தில் இணைந்தார். 2005 இல் குகென்கீம் ஆய்வுநல்கைஅயைப் பெற்றார். இவரது நினைவாக 1999 இல் சிறுகோள் ஒன்று [[8356 வாத்வா என பன்னாட்டு வானியல் கழகத்தால் பெயரிடப்பட்டது. [2] இவர் 2000 இல் நியேர் பரிசைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Research | Meteoritics | Center for Meteorite Studies | ASU". meteorites.asu.edu. Archived from the original on 2016-02-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-27.
  2. "JPL Small-Body Database Browser: 8356 Wadhwa".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_வாத்வா&oldid=3791896" இலிருந்து மீள்விக்கப்பட்டது