உள்ளடக்கத்துக்குச் செல்

மீனாட்சி மகந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி மகந்தா
Minakshi Mahanta
உறுப்பினர், ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்சனாதன் மகாகுத்து
தொகுதிசாம்புவா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிச்சூ சனதா தளம்

மீனாட்சி மகந்தா (Minakshi Mahanta) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிச்சூ சனதா தளத்தின் ஒரு பணியாளராக ஒடிசா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஒடிசா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், இவர் சாம்புவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 16 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மீனாட்சி மகந்தா 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று சுசில் குமார் மகந்தாவிற்கு மகளாகப் பிறந்தார். இவரது கணவரின் பெயர் பக்தபந்து மகந்தா என்பதாகும். மீனாட்சி கலைப் பிரிவில் இடைநிலைப் பட்டம் பெற்றிருந்தார்.

அரசியல்

[தொகு]

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், மீனாட்சி மகந்தா பிச்சூ சனதா தளம் கட்சி வேட்பாளராக சாம்புவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 16 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு முதல் ஒடிசா சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Minakshi Mahanta". Odisha Legislative Assembly. Retrieved 12 October 2021.
  2. "BJD Nominates Minakshi Mahanta For Champua Assembly Seat". Odisha Bytes. 4 April 2019. Retrieved 12 October 2021.
  3. "BJD's Minakshi Mahanta wins Champua Assembly seat". Prameyanews. 23 May 2019. Retrieved 12 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_மகந்தா&oldid=4393134" இலிருந்து மீள்விக்கப்பட்டது