உள்ளடக்கத்துக்குச் செல்

மீனாட்சி படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீனாட்சி படேல் (Meenakshi Patel) என்பவர் இந்தியாவில் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அகமதாபாது நகரத்தின் 32வது மாநகரத் தந்தையாகவும், இந்திய மாநிலமான குசாராத்தில் பதவியை வகித்த 4வது பெண்மணியாகவும் 2013 ஏப்ரல் 30 முதல் 2015 திசம்பர் 14 வரை பணியாற்றினார். [1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2013-இல் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

45 வயதான மீனாட்சி படேல், படேல் சமூகத்திலிருந்து மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார். ஜோத்பூர் மாநகராட்சியின் புதிய உறுப்பினர் - மீனாட்சி அல்லது 'மீனாபென்' என்று பிரபலமாக அறியப்படுபவர். 2013 ஏப்ரல் 30 ஆம் தேதி தனது பதவிக் காலத்தை முடித்த அசித் வோராவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதே கூட்டத்தில், அம்ராய்வாடி மாநகராட்சி உறுப்பினர் இரமேஷ் தேசாய் மாநகரத் துணைத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீனாட்சியின் முக்கிய சவாலும், அவரது முதல் முன்னுரிமையும் நகரத்தை பெரிதும் பாதிக்கும் போக்குவரத்து மேலாண்மை , தூய்மைப் பிரச்சினைகள் ஆகும்.

"மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களுக்குத் தண்ணீர், சாலை மற்றும் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்" என்று 45 வயதான மாநகரத்தந்தை கூறினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shah, Kinjal (4 January 2014). "Writing More Important: Ahmedabad's First Gujarati Literature Festival Opened on Friday with a Fiery and Interesting Discussion between Four Renowned Authors and the Audience Gujarati Literature Festival". DNA. Archived from the original on 1 March 2016. Retrieved 2 October 2015 – via HighBeam.
  2. "Meenakshi Patel is new Ahmedabad mayor, 4th woman to hold post". 1 May 2013. http://www.dnaindia.com/ahmedabad/report-meenakshi-patel-is-new-ahmedabad-mayor-4th-woman-to-hold-post-1829254. பார்த்த நாள்: 8 August 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_படேல்&oldid=4217694" இலிருந்து மீள்விக்கப்பட்டது