மீனாட்சி பகுஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018இல் குடியர்சுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து நாரி சக்தி விருதினைப் பெறும் மீனாட்சி

மீனாட்சி பகுஜா (Meenakshi Pahuja) (பிறப்பு 1978) ஒரு இந்திய விரிவுரையாளரும் மாரத்தான் நீச்சல் வீரரும் ஆவார். ஒரு நீச்சல் போட்டி வீரராக வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பிறகு, இவர் புது தில்லி, லேடி சிறீ ராம் கல்லூரியில் ஆசிரியரானார். பின்னர் கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற வெளிப்புற நீர்நிலைகளில் நடக்கும் நீச்சல் போட்டிகளில் நுழைந்தார். இவர் 2018இல் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மீனாட்சி பகுஜா 1978இல் பிறந்தார்.[1] தனது பெற்றோருக்கு மூன்று குழந்தைகளில் மூத்தவரான தில்லியில் வளர்ந்தார். இவரது தந்தை வி. கே. பகுஜா புதி தில்லியின் மாடர்ன் பள்ளியில் நீச்சல் பயிற்சியாளராக இருந்தார்.[2] மீனாட்சி முதலில் தனது ஐந்து வயதில் நீச்சல் போட்டிகளில் நுழைந்தார். ஒன்பது வயதை எட்டுவதற்கு முன்பு இளையோருக்கான 50 மீட்டர் முன்னோக்கி நீந்தும் பிரிவுகளில் தேசிய வெற்றியாளர் ஆனார்.

தொழில்[தொகு]

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 1996ஆம் ஆண்டு தென்கொரியாவின் புசானில் நடந்த ஆசியா பசிபிக் வயதுக் குழு நீச்சல் வாகையாளர் போட்டியில் 400 மீட்டர் தனிநபர் பிரிவில் பகுஜா பதக்கம் வென்றார். இவர் தேசிய விளையாட்டுகளில் மூன்று முறை வாகையாளரானார்.[3] 2001ஆம் ஆண்டில், இவர் நீச்சலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான லேடி சிறீ ராம் கல்லூரியில் உடல் பயிற்சியில் விரிவுரையாளரானார்.

ஆகஸ்ட் 2006 இல், பகுஜா மராத்தான் நீச்சலில் கலந்து கொள்ளத் தொடங்கினார். இவர் மேற்கு வங்கத்தின் முர்சிதாபாத்தில் உள்ள பாகீரதி-ஊக்லி ஆற்றின் 19 கிமீ நிகழ்வில் பங்கேற்றார். 2007ஆம் ஆண்டு சூரிச் நீச்சல் ஏரியில் போட்டியிட இவர் சுவிட்சர்லாந்து சென்றார் (ராப்பர்ஸ்வில் இருந்து சூரிக்கு வரை 26.4 கிமீ), அங்கு இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[4] இவருடைய தந்தையும் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான தீபக் பென்டால் ஆகிய இருவரும் நிதி உதவி செய்தனர்.

இவர்ஆங்கிலக் கால்வாயை நீந்த பகுஜா இரண்டு முறை முயற்சித்துள்ளார். இவரது முதல் முயற்சி 2008இல் இருந்தது. டோவர் நகரம் வருவதற்கு ஒரு வாரத்டிற்கு முன்னதாகவே பாகீரதி-ஊக்லி ஆற்றின் 81கி.மீ. நீந்தி வாகையாளனார். இவர் "சேற்று நீரையும் நதி பாம்புகளையும்" எதி கொண்டாண்டாலும், 12 மணிநேரம் 27 நிமிடங்களில் முடித்தார். இருப்பினும், இவருக்கு கடல் நீச்சல் அனுபவம் இல்லாததால், ஆங்கிலக் கால்வயிலுள்ள நீரோட்டத்துடன் போராடினார். கடற்பரப்பு காரணமாக 11 கி.மீ.க்குப் பிறகு விலகினார். பகுஜா 2014இல் தனது இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார். மீண்டும் ஆங்கிலக் கால்வாயிலிருந்து தொடங்கினார். 14 மணிநேரம் 19 நிமிடங்களில் 40 கிமீ தூரத்தை நீந்திய பிறகு, மாறிவரும் அலைகளால் இவர் மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் நிறைவு செய்ய இன்னும் 3 கிமீ தொலைவில் இருந்தார். [5] [6]

கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக, பல இந்திய நீச்சல் வீரர்கள் பயிற்சி வசதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் இவர் அவர்களுக்கான அணுகலை மேற்கொண்டார்.[7] [8]

விருதுகள்[தொகு]

இந்தியக் குடியர்சுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து 2018ஆம் ஆண்டின் நாரி சக்தி புரஸ்கார் விருதினை (பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருது) பகுஜா பெற்றார். [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ajmal, Anam (20 October 2020). "Test your limits, marathon swimmer tells Bennett University students". The Times of India. https://timesofindia.indiatimes.com/home/education/test-your-limits-marathon-swimmer-tells-bennett-university-students/articleshow/78770463.cms. பார்த்த நாள்: 18 November 2020. 
  2. Pritam, Norris (2 June 2011). "Water woman!". The Hindu. https://www.thehindubusinessline.com/news/variety/Water-woman/article20252001.ece. பார்த்த நாள்: 18 November 2020. 
  3. Goswami, Neev (29 July 2020). "Swimming in India is a ‘work in progress’: Pahuja". The Daily Guardian. https://thedailyguardian.com/swimming-in-india-is-a-work-in-progress-pahuja/. பார்த்த நாள்: 18 November 2020. 
  4. Mishra, Archana (19 August 2014). "She has a passion for swimming" (in en). Deccan Herald. https://www.deccanherald.com/content/426400/she-has-passion-swimming.html. பார்த்த நாள்: 18 November 2020. 
  5. "English Channel". Swimming Coaching Institute. பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
  6. "Meenakshi Pahuja 2014". Channel Swimming Association (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
  7. Srinivasan, Kamesh. "Indian swimming fraternity anxious to follow the world". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
  8. "Meenakshi Pahuja, Author at The Daily Guardian". The Daily Guardian (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
  9. "Meenakshi Pahuja Honored For Her Achievements". WOWSA. 8 March 2020. https://openwaterswimming.com/meenakshi-pahuja-honored-for-her-contributions-and-achievements/. பார்த்த நாள்: 18 November 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_பகுஜா&oldid=3277282" இலிருந்து மீள்விக்கப்பட்டது