மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
| வகை | அரசு, மகளிர் கலைக் கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 1965 |
| முதல்வர் | சு. வானதி |
நிருவாகப் பணியாளர் | 150 (பேராசிரியர்கள்) 43 (அலுவலகப் பணியாளர்கள்) |
| மாணவர்கள் | 4150 (2013 ஆண்டு நிலவரப்படி) |
| அமைவிடம் | , , |
| இணையதளம் | http://smgacw.org/ |
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) (Sri Meenakshi Government Arts College for Women) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் மதுரையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான அரசினர் கலைக் கல்லூரியாகும். 1965-ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது தன்னாட்சித் தகுதியுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1][2] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத் தரப்படும் இக்கல்லூரியில் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி 4150 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
வரலாறு
[தொகு]மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 1965-ல், 20 ஏக்கர் பரப்பளவில் 320 மாணவிகள், 13 பேராசிரியர்கள், 13 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1998 அக்டோபர் 6 அன்று தன்னாட்சித் தகுதியைப் பெற்றது. இக்கல்லூரி தற்போது, 3639 மாணவர்கள், 150 பேராசிரியர்கள், 43 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
வழங்கும் படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் தற்போது 13 இளநிலைப் பட்டப் படிப்புகளும், 12 முதுநிலைப் பட்டப் படிப்புகளும், 4 ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இளநிலைப் படிப்புகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- புவியியல்
- மனையியல்
முதுநிலைப் படிப்புகள்
[தொகு]- வரலாறு
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- இயற்பியல்
- தாவரவியல்
- விலங்கியல்