மீனாட்சிசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீனாட்சிசுந்தரம், மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓர் சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

வரலாறு[தொகு]

மதுரை மாவட்டம், திருமங்கலம் சுப்பிரமணிய ஐயர் என்பருக்கு மகனாகப் பிறந்த மீனாட்சி சுந்தரம், தனது 16 வயதில் காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்காக போராடினார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட, திருமங்கலம் பகுதி இளைஞர்களை பல்வேறு பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், போராட்ட பிரச்சாரங்களின் மூலம் ஒருங்கிணைத்தார். இவரது ஆற்றலைக் கண்டு தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தின் தலைவர் சத்தியமூர்த்தி, இவரைக் காங்கிரசு இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக சேர்த்தார். சுதந்திரப் போராட்ட விஸ்வநாத தாசும் இவரும் சிறந்த நண்பர்களாகவும் திகழ்ந்தனர். 1931ல், நாடக நடிகரான சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ், நெல்லையில் சுதந்திரத்தைத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலைப் பாடியதற்காகக் கைது செய்யப்பட்டார். அப்போது இவருக்காக வழக்காடும்படி வ. உ. சிதம்பரம்பிள்ளையிடம் மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ. உ. சிதம்பரம்பிள்ளையும் வழக்கை ஏற்று நடத்திக் கொடுத்தார். 1932ல் நடந்த சட்ட மறுப்புப் போராட்டத்திலும் 1941ம் நடந்த தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார்[1]

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட காலமாக குடமுழுக்கு செய்யப்படாமலிருந்த திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், தனது தலைமையில் குடமுழுக்கு செய்து வைத்தார்.

விருதுகள்[தொகு]

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கான இவரது தியாகத்தைப் பாராட்டி, மத்திய அரசு இவருக்கு தாமிரப்பட்டயம் வழங்கி கௌரவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்". 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |accessyear= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)

திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம் வரலாறு பரணிடப்பட்டது 2015-08-18 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சிசுந்தரம்&oldid=3371545" இருந்து மீள்விக்கப்பட்டது