மீநிறை நீர்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
[3H]2-water
| |
வேறு பெயர்கள்
திரிட்டியம் நீர்
திரிட்டியம் ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
14940-65-9 | |
ChEBI | CHEBI:29374 |
ம.பா.த | tritium+oxide |
பப்கெம் | 104752 |
பண்புகள் | |
T2O or 3H2O | |
வாய்ப்பாட்டு எடை | 22.0315 mol-1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
திரிட்டியம் நீர் அல்லது மீநிறை நீர் என்பது நீரின் மூலக்கூற்றில் உள்ள ஓவ்வொரு ஐதரசனுக்கு மாற்றீடாகத் திரிட்டியம் என்னும் ஐதரசன் ஓரிடத்தான் உள்ள நீராகும். நீரில் உள்ள எல்லா நீர் மூலக்கூறுகளும் இப்படி மாற்றப்பட வேண்டும் என்பதல்ல, சிலவே அப்படி மாற்றப்பட்டிருக்கும். திரிட்டியம் என்பது இரண்டு நொதுமிகளும் ஒரு நேர்மின்னியும் சேர்ந்து மூன்று அணுக்கருனிகள் அணுக்கருவினுள்ளே கொண்ட ஐதரசன் ஓரிடத்தான். கனநீர் போல் அல்லாமல், இந்த மீநிறை நீர், கதிரியக்கம் கொண்டதாகும். மீநிறை நீர் என்பது திரிட்டியம் ஆக்சைடு (T2O அல்லது 3H2O) என்றும் அழைக்கப்படும். இது கதிரியக்கத்தால் சிதைவுறுவதால், அரிக்கும் பண்பு கொண்டது. பெரிதும் "நீர்த்துப்போன" திரிட்டியம் கலந்த நீர் பெரும்பாலும் H2O என்பதோடு சிறிதளவு HTO (3HOH) கொன்டதாக இருக்கும். இயற்கையில் திராட்சைக் கள் முதலியவற்றிலும் நீர்மங்களிலும் மிக மிகச்சிறிதளவு (இம்மியளவு) திரிட்டியம் கலந்திருக்கும் ஆதலால், அதனை அளப்பதன் மூலம் ஒரு பொருள் இருப்பின் காலத்தை அளவிட முடியும்[சான்று தேவை]
பயன்பாடுகள்
[தொகு]திரிட்டியம் நீரில் கதிரியக்க ஐதரசன் கலந்திருப்பதால் ஆற்றல் குறைவான பீட்டா துகள்கள் உமிழப்படுகின்றன.இவற்றின் அரையாண்டுக் காலம் 12 ஆண்டுகளாகும். இதனால் உடம்புக்கு அதிகபட்ச பாதிப்பு இல்லையென்றாலும் சுவாசிக்க நேர்ந்தாலோ உடலுக்குள் எப்படியாவது புக நேர்ந்தாலோ கதிரியக்கத்தின் ஆபத்து உண்டு.[1][2][3][4] திரிட்டியம் கலந்த நீரை உடலில் செலுத்தினால், உடலின் எல்லா பாகங்களுக்கும் விரைவாக ஒரே சீராகப் பரவிவிடும் என்பதால், சிறுநீரை அளந்து அதில் உள்ள திரிட்டியம் அளவை அளப்பது மூலம் உடலில் எவ்வளவு (கனவளவு) நீர் உள்ளது என்று அறிய முடியும் (முதலில் கலந்த திரிட்டியத்தின் அளவை அளந்திருக்க வேண்டும்)
- கலந்த திரிட்டியம் அளவு (மில்லிகிராம்) (mg) = திரிட்டியம் கலந்த நீரின் அடத்தி (mg/ml) x உடலின் நீரின் மொத்த கனவளவு (ml)
- உடலின் நீரின் கனவளவு (ml) = [திரிட்டியம் கலந்த நீர் (mg) - வெளிவிடப்பட்ட நீர் (mg)] / திரிட்டியம் கலந்த நீரின் அடர்த்தி (mg/ml)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tritium Hazard Report: Pollution and Radiation Risk from Canadian Nuclear Facilities பரணிடப்பட்டது 2010-05-20 at the வந்தவழி இயந்திரம், I. Fairlie, June 2007
- ↑ Osborne, R.V. (August 2007) Review of the Greenpeace report: "Tritium Hazard Report: Pollution and Radiation Risk from Canadian Nuclear Facilities", nuclearfaq.ca
- ↑ Fact Sheet on Tritium, Radiation Protection Limits, and Drinking Water Standards, U.S. Nuclear Regulatory Commission
- ↑ Tritium Facts and Information பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம், Pensilvania Department of Environmental Protection