மீத்தைல் புரோப்பியோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீத்தைல் புரோப்பியோனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் புரோப்பியோனேட்டு
வேறு பெயர்கள்
புரோபனாயிக் அமிலம், மெத்தில் எசுத்தர்
புரோபியானிக் அமிலம், மெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
554-12-1
ChemSpider 10653
InChI
 • InChI=1S/C4H8O2/c1-3-4(5)6-2/h3H2,1-2H3
  Key: RJUFJBKOKNCXHH-UHFFFAOYSA-N
 • InChI=1/C4H8O2/c1-3-4(5)6-2/h3H2,1-2H3
  Key: RJUFJBKOKNCXHH-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11124
SMILES
 • O=C(OC)CC
பண்புகள்
C4H8O2
வாய்ப்பாட்டு எடை 88.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம் [1]
அடர்த்தி 0.915 கி/மி.லி[1]
உருகுநிலை −88 °C (−126 °F; 185 K)[1]
கொதிநிலை 80 °C (176 °F; 353 K)[1]
72 கி/லி (20 °C)[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை −2 °C (28 °F; 271 K)[1]
Autoignition
temperature
465 °C (869 °F; 738 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் புரோப்பியோனேட்டு (Methyl propionate) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இச்சேர்மம் மெத்தில் புரோபனோயேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தெளிவான திரவநிலையில் உள்ள இச்சேர்மம் பழ நறுமணத்துடன் ரம் எனப்படும் போதைபானத்தின் நறுமணத்துடன் காணப்படுகிறது[2].

தயாரிப்பு[தொகு]

மெத்தனால் மற்றும் புரோபனாயிக் அமிலம் ஆகியவற்றை எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி மெத்தில் புரோப்பியோனேட்டு தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் நிக்கல் கார்பனைல் முன்னிலையில் எத்திலீனுடன் கார்பன் மோனாக்சைடையும் மெத்தனாலையும் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்[3].

பயன்கள்[தொகு]

செல்லுலோசு நைட்ரேட்டு மற்றும் அரக்கு முதலானவற்றை கரைக்க உதவும் கரைப்பானாக மெத்தில் புரோப்பியோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சாயங்கள், மெருகுவண்ணங்கள் மற்றும் மெத்தில் மெத்தாகிரைலேட்டு போன்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது[2][3].

பழத்தின் சுவையுடைய காரணத்தால் இதை நறுமணமூட்டியாகவும் நறுஞ்சுவையூட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்[2][4]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
 2. 2.0 2.1 2.2 Methyl Propionate Hazardous Substance Fact Sheet. New Jersey Department of Health and Senior Services. http://nj.gov/health/eoh/rtkweb/documents/fs/1290.pdf. 
 3. 3.0 3.1 Ulf-Rainer Samel, Walter Kohler, Armin Otto Gamer and Ullrich Keuser (2000). Propionic Acid and Derivatives. doi:10.1002/14356007.a22_223.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783527306732. (mayth and yafs)
 4. "Methyl propionate". thegoodscentscompany.com.