மீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீடியா
தனது சொந்தத் தேரில் மீடியா
துணைஜேசன், ஏஜியஸ்
பெற்றோர்கள்ஏயிட்ஸ் மற்றும் இடியா
சகோதரன்/சகோதரிஅப்சிர்டஸ், கால்சியோப்
மீடியா தனது தேரில் பறக்கிறாள் (கிளீவ்லேண்ட் அருங்காட்சியகம்)

மீடியா ( Medea ) என்பது கிரேக்க புராணங்களில், சொல்லப்பட்டுள்ள கொல்கிஸ் மன்னன் ஏயெட்ஸின் மகளும், சிர்ஸின் மருமகளும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் பேத்தியுமாவாள். ஜேசன் மற்றும் அர்கோனாட்ஸின் கட்டுக்கதையில் உள்ள மீடியா உருவங்கள், கி.மு 750இலிருந்து 650 வரை செயற்பட்டதாகக் கருதப்படும் கிரேக்கக் கவிஞர் எசியோடின் தியோகோனியில் தோன்றின. [1] ஆனால் யூரிபிடீசின் சோகக் காவியமான மீடியா மற்றும் ரோட்ஸின் காவியமான அர்கோனாட்டிகாவின் அப்பல்லோனியஸ் ஆகியவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டவை. மீடியா ஒரு சூனியக்காரி என்று பெரும்பாலான கதைகளில் அறியப்படுகிறாள். பெரும்பாலும் ஹெகேட் தெய்வத்தின் பூசாரியாக சித்தரிக்கப்படுகிறாள்.

வரலாறு[தொகு]

ஹெர்குலியத்தில் கிடைத்த ஒரு ஓவியத்தில் மீடியா.
மீடியா தனது குழந்தைகளில் ஒருவரைக் கொலை செய்கிறாள் (லூவ்ரே)

மீடியா ஒரு உதவி-கன்னிப் பெண்ணாகப் பழமையான பாத்திரமாக உலாவுகிறாள். தனது காதலன் ஜேசனின் தங்கக் கொள்ளையைத் தேடுவதில் அவனுக்கு உதவுகிறாள். மந்திரத்தைப் பயன்படுத்தி அவனது உயிரைக் காப்பாற்றுகிறாள். அவன் தேடலை முடித்தவுடன், இவள் கொல்கிஸ் என்ற தனது சொந்த வீட்டைக் கைவிட்டு, தனது காதலன் ஜேசனுடன் மேற்கு நோக்கி தப்பி ஓடுகிறாள். அங்கு அவர்கள் இறுதியில் கொரிந்தில் குடியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். யூரிபிடீஸின் கிமு 5 ஆம் நூற்றாண்டின் சோக நாடகமான "மீடியா", ஜேசனுடனான இவளது கூட்டுறவின் முடிவைக் கூறுகிறது . திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேசன் மன்னன் கிரோனின் மகள் கிரூசாவை திருமணம் செய்ய மீடியாவைக் கைவிடுகிறான். ஜேசன் மூலம் மீடியாவும் அவளுடைய மகன்களும் கொரிந்துவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். பழிவாங்கும் விதமாக, இவள் கிரூசாவை நஞ்சு கலந்த பரிசுகளால் கொலை செய்கிறாள். பின்னர், ஏதென்ஸுக்கு தப்பிச் செல்வதற்கு முன், ஜேசனுக்குப் பிறந்த தனது சொந்த மகன்களைக் கொன்றுவிடுகிறாள்.[2] அங்கு இவள் இறுதியில் மன்னன் ஏஜியஸை மணக்கிறாள்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பல கணக்குகளின்படி மாறுபடுகிறது. எரோடோட்டசு தனது வரலாற்றில், இவள் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஈரானிய பீடபூமியில் ஆரியர்களிடையே குடியேறினாள் என்று குறிப்பிடுகிறார். பின்னர் அவர்கள் தங்கள் பெயரை மீடியர்கள் என்று மாற்றிக் கொண்டனர்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Hesiod Theogony 993–1002
  2. Euripides, Medea line 788
  3. Herodotus Histories VII.62i

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மீடியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியா&oldid=3675063" இலிருந்து மீள்விக்கப்பட்டது