மீசா சபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீசா சபி (ஆங்கிலம் : Meesha Shafi ) 1981 டிசம்பர் 1 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் நடிகை, வணிக மாதிரி மற்றும் பாடகியாவார்.[1] 2013 மீரா நாயரின் திரைப்படமான தி ரிலாக்டன்ட் ஃபண்டமண்டலிஸ்ட் என்றத் திரைப்படத்தில் ஒரு துணை வேடத்தில் சபி அறிமுகமானார். அடுத்த ஆண்டு அவர் பாலிவுட்டின் பாக் மில்கா பாக் என்றப் படத்தில் தோன்றினார், இது இந்தியாவில் 2013 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் ஒன்றாகும் . பிலால் லஷாரியின் அதிரடித் திரைப்படமான வார் திரைப்படத்தில், இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் செயல்பாட்டாளர் லட்சுமி என்ற பாத்திரத்திற்காக அவர் மேலும் விமர்சன ரீதியான வெற்றியைப் பெற்றார், இது பாக்கித்தானில் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த பாக்கித்தான் படங்களில் ஒன்றாகும்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பாக்கித்தானின் லாகூரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் நடிகை சபா கமீத் மற்றும் சையத் பெர்வைசு சபி ஆகியோருக்கு சபி பிறந்தார். அவர் லாகூர் இலக்கணப் பள்ளியில் இருந்து தனது நிலைகளில் தேர்ச்சி பெற்றார் மற்றும் 2007 இல் தேசிய கலைக் கல்லூரியில் நுண்கலைகளில் பட்டம் பெற்றார்.[2]

தொழில்[தொகு]

வணிக மாதிரி[தொகு]

"பின் தேரே க்யா ஹை ஜீனா" பாடலுக்கான இசை காணொளியில் ஜவாத் அகமதுவுடன் இணையாக நடித்தபோது, சபி தனது 17 வயதில் வணிக மாதிரி நடிகையாக தொடங்கினார்.[3] 2009 ஆம் ஆண்டில் சபி இலோரியல் பாரிஸ் பாக்கித்தானின் விளம்பரத் தூதரானார் .[2][4] அவர் பல பாக்கித்தான் பத்திரிகைகளிலும், எல் ஆஃபீசீல் மற்றும் வோக் இந்தியா போன்ற சர்வதேச வெளியீடுகளிலும் இடம் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில், ஹலோ பத்திரிகை பாக்கிஸ்தானில் மிகவும் செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் சபியை பெயரிடப்பட்டது.

நடிப்பு[தொகு]

ஹம் டிவியில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தொடரான முஹாபத் கவாப் கி சூரத் மூலம் சபி திரைக்கு அறிமுகமானார். பின்னர் 2007 இல் அவர் ஜியோ டிவி தொடரான யே ஜிந்தகி டு வோ நஹியில் தோன்றினார்.

கேட் ஹட்சன் மற்றும் ரிஸ் அகமது ஆகியோருடன் மீரா நாயரின் 2012 ஹாலிவுட் திரைப்படமான தி ரிலாக்டன்ட் ஃபண்டமண்டலிஸ்ட் ( அதே பெயரில் மொஹ்சின் ஹமீத்தின் நாவலை அடிப்படையாகக் கொண்டது) மூலம் அவர் திரைப்படத்தில் அறிமுகமானார். 9/11 க்குப் பிறகு அமெரிக்கர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய மோசமான தாக்கத்தை இந்த படம் விவரிக்கிறது. இப்படத்தில் சபி ஒரு சிறிய பாத்திரத்தை கொண்டிருந்தார் மற்றும் படத்தில் இரண்டு காட்சிகளில் மட்டுமே ஆணை வழிநடத்தும் ஒரு சகோதரியின் பாத்திரத்தில் தோன்றினார். இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, மேலும் திரையரங்க வசூலில் குறைவான வசூலையேக் கொண்டது.[5][6]

சொந்த வாழ்க்கை[தொகு]

சபியின் தாய்வழி தாத்தா, ஒரு புதின ஆசிரியர் மற்றும் செய்தித்தாள் கட்டுரையாளர், முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் தலைவர் மற்றும் இம்ரோஸ் மற்றும் நாவா-இ-வாக்ட் உள்ளிட்ட உருது நாளிதழ்களின் ஆசிரியராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில், அவர் இசைக்கலைஞர் மஹ்மூத் ரஹ்மானை மணந்தார்.[7] இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், ஜானேவி என்ற மகள், காசிமிர் என்ற மகன் உள்ளனர்.[8]

அலி ஜாபர் சம்பவம்[தொகு]

2018 ஆம் ஆண்டில் #மீ டூ இயக்க அலையின் போது நடிகர் அலி ஜாபர் மூலம் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மீசா சபி குற்றம் சாட்டினார். அவர் ஒரு ஊழியர் அல்ல என்றும் இந்தக் குற்றச்சாட்டு பணியிட துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் இல்லை என்றும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவரது வழக்கை தொழில்நுட்ப அடிப்படையில் தள்ளுபடி செய்தது.[9]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசா_சபி&oldid=3639213" இருந்து மீள்விக்கப்பட்டது