மிஸ் பேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிஸ் பாகேர், விண்வெளியாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மிஸ் பேக்கர்
Miss Baker
Miss Baker, the squirrel monkey.jpg
விண்வெளி முன்னோடி
பிறப்பு1957
இக்கிடோடு, பெரு[1]
இறப்புநவம்பர் 29, 1984(1984-11-29) (அகவை 27)
ஆபர்ன் பல்கலைக்கழக மருத்துவமனை, ஆபர்ன், அலபாமா
வேறு பணிகள்
பிரபலர்
விண்வெளி நேரம்
16 நிமிடம்
பயணங்கள்ஜுபிடர் எம்-18

மிஸ் பேக்கர் (Miss Baker, 1957 – நவம்பர் 29, 1984), ஐக்கிய அமெரிக்காவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய முதல் இரண்டு குரங்குகளில் ஒன்று. இது அணில் குரங்கு பிரிவைச் சார்ந்தது, இதனுடன் செம்முகக் குரங்கு மிஸ் ஆப்லேயும் சென்று திரும்பியது.[1]

மே 29, 1958ல் அதிகாலை 2.39க்கு ஜுப்பிடர் விண்கலம் மூலம் மிஸ் பேக்கர், மிஸ் ஆப்லே ஆகிய குரங்குகள் 300மைல் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மிஸ் பாகேர் தன்னுடைய 27வது வயதில், 1984ல் சிறுநீரகத் தோல்வியால் மரணம் அடைந்தது.[1][2] ஆனால் மிஸ் ஆப்லே, விண்வெளிக்கு சென்று திரும்பிய நான்கு நாட்களுக்கு பிறகு மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது.[3]

அமெரிக்காவின் விண்வெளியில் விலங்குகள் திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது, தோல்விக்கு காரணமாக மூச்சுத்திணறல், பாராசூட் விரிவடையாமை போன்றவை ஆயிற்று, ஆனால் விலங்குகள் உரிமை ஆர்வலர்களின் அழுத்தத்தின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.[4][5]

பேக்கருக்கு முன்னதாக, சோவியத் ஒன்றியம் இரண்டு நாய்களை விண்வெளியிலிருந்து பத்திரமாக மீட்டிருந்தது, சூலை 22, 1951ல் விண்வெளி துணை சுற்றுப்பாதையில் 101 கிலோமீட்டர்கள் (331,000 ft) உயரத்திலிருந்து முதல் பாலூட்டிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வேறு சில நாய்களும் மீட்கப்பட்டன.[6]

1951ல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஏரோபி ராக்கெட் மூலம் கார்மன் கோடுகளுக்கு கீழே வரை எலி மற்றும் குரங்குகளை எடுத்து சென்று தோல்வியடைந்திருந்தது.[7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Miss Baker". Find a Grave. பார்த்த நாள் September 14, 2011.
  2. "Memorial Set for Miss Baker". (Florence/Sheffield/Tuscumbia/Muscle Shoals) Times Daily. December 2, 1984. http://news.google.com/newspapers?id=cWgeAAAAIBAJ&sjid=78cEAAAAIBAJ&dq=miss%20baker%20monkey&pg=4330%2C142872. பார்த்த நாள்: September 14, 2011. 
  3. "ஆப்லே". பார்த்த நாள் செப்டம்பர் 13, 2015.
  4. "V2". Astronautix. பார்த்த நாள் September 14, 2011.
  5. "1959: Monkeys survive space mission". BBC News. பார்த்த நாள் September 14, 2011.
  6. Asif. A. Siddiqi (2000). Challenge to Apollo: The Soviet Union and the Space Race, 1945–1974. NASA. பக். 95. http://history.nasa.gov/SP-4408pt1.pdf. 
  7. "Animals in Space". NASA. பார்த்த நாள் October 9, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்_பேக்கர்&oldid=2555887" இருந்து மீள்விக்கப்பட்டது