மிஸ்பாகுல் இஸ்லாம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிஸ்பாகுல் இஸ்லாம் இலங்கையிலிருந்து 1906ல் வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும்.

பொருள்[தொகு]

'மிஸ்பாகுல் இஸ்லாம்' என்ற அரபுப் பதத்தின் தமிழ்கருத்து 'இசுலாமிய விளக்கு' என்பதாகும்

உள்ளடக்கம்[தொகு]

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய விளக்கங்களை போதியளவு பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படவில்லை. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் குத்பா எனப்படும் மார்க்க சொற்பொழிவை தவிர சமயத்தைப் பற்றிய பொதுவாக அறிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இத்தகைய குறையினை கற்றவர்கள் மத்தியில் ஓரளவாவது போக்கும் முகமாக இசுலாமிய விளக்கங்களைக் கொண்ட இதழாக இது காணப்பட்டது.