மிஷி சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிஷி சௌத்ரி (Mishi Choudhary) இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வழக்கறிஞரும், இணைய சுதந்திர ஆர்வலரும் ஆவார். இவர் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தில் சட்ட இயக்குனரும், இந்தியாவின் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் (SFLC.in ) நிறுவனரும் ஆவார். [1] மென்பொருள் சுதந்திர சட்ட மையம் வழக்கறிஞர்கள், கொள்கை ஆய்வாளர்கள் , தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்து மின்னணு உரிமைகளுக்காகப் போராடுகிறது. அறிக்கைகளை உருவாக்குகிறது. மேலும் இந்திய இணையத்தின் நிலை குறித்த ஆய்வுகள், ஒரு உற்பத்திச் சட்டப் பிரிவையும் கொண்டுள்ளது. இவரது தலைமையின் கீழ், மென்பொருள் சுதந்திர சட்ட மையம் முக்கிய வழக்குகளை நடத்தியது. கருத்து சுதந்திரம் மற்றும் இணைய பிரச்சனைகள் குறித்து இந்திய அரசிடம் மனு அளித்ததுடன், இந்தியாவில் பெண்களை துன்புறுத்த பயன்படும் முகநூல் , வாட்சப் ஆகியவற்றின் அம்சத்தை சரிசெய்ய பிரச்சாரம் செய்தது. [2]

கல்வி[தொகு]

மிஷி சௌத்ரி அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்தில் கௌரவத்துடன் சட்டத்தில் பட்டமும் பெற்றார். [3] மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் முதல் இலவச மற்றும் திறந்த மூல உறுப்பினராக, இவர் ஹார்லன் பிஸ்கே ஸ்டோன் அறிஞராக இருந்த கொலம்பியா சட்டப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார். [3] [4]

தொழில்[தொகு]

சௌத்ரி தில்லி உயர் நீதிமன்றத்திலும் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, இவர் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தில் ஆலோசகராக பணியாற்றத் தொடங்கினார். இவர் 2011 முதல் 2013 வரை சர்வதேச பயிற்சியின் இயக்குநராக பணியாற்றினார். சூலை, 2013 இல் அவர் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் சட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தில்டெபியன், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, கோடி (மென்பொருள்), அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை , கட்டற்ற பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு உட்பட உலகின் பல குறிப்பிடத்தக்க இலவச மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் இலாப நோக்கற்ற விநியோகஸ்தர்களின் முதன்மை சட்ட பிரதிநிதியாக பணியாற்றினார். [5] அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சீனா மற்றும் கொரியாவில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் இலவச மென்பொருளைப் பயன்படுத்தும் அரசாங்கங்கள் நிறுவப்பட்ட வணிகங்கள் மற்றும் தொடக்கங்களுடன் இந்த திட்டங்களில் சிலவற்றை இவர் தொடர்ந்து சேவை செய்கிறார். 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் இந்திய உச்ச நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் தோன்றிய உலகின் ஒரே வழக்கறிஞர் இவர் மட்டுமே. [6] சிரேயா சிங்கால் எதிர் இந்திய அரசு வழக்கின் முன்னணி ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். இதில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66A அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.

2018ஆம் ஆண்டில், இவர் தனது தொழில்நுட்ப சட்டம் மற்றும் கொள்கை நிறுவனமான "மிஷி சௌத்ரி அன்ட் அசோசியேட்ஸ்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். [7]

கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

2015 ஆம் ஆண்டில், ஆசியா அமைப்பின் 21 இளம் தலைவர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொழில்நுட்ப வழக்கறிஞராகவும் இணைய சுதந்திர ஆர்வலராகவும் பணியாற்றினார். [8] 2016ஆம் ஆண்டில், ஆஸ்பென் நிறுவனம் இவரை கமலநயன் பஜாஜ் சக ஊழியராகவும், ஆஸ்பென் உலகளாவிய தலைமைத்துவ வளையமைப்பின் உறுப்பினராகவும் பட்டியலிட்டது. [9] 2017 ஆம் ஆண்டில், இவர் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தில் பணியாற்றியதற்காக "சமூக தாக்கம்" பிரிவில் மின்னணு மகளிர் விருதை வென்றார். [10] 2017 ஆம் ஆண்டில், ஓபன் (இந்திய பத்திரிகை) இவரை சுதந்திரப் போராளி மற்றும் இலவச இணையத்தின் வளர்ந்து வரும் சட்ட பாதுகாவலர்களில் ஒருவராக பட்டியலிட்டது. அவர் லினக்சு கர்னலுக்கான நடத்தை குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார் [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Team - Software Freedom Law Center". softwarefreedom.org.
  2. Censorship, Index on (March 20, 2019). "#IndexAwards2019: SFLC.in tracks internet shutdowns in India".
  3. 3.0 3.1 "Mishi Choudhary". Global Freedom of Expression.
  4. "Our People – Moglen & Associates".
  5. "Team - Software Freedom Law Center". www.softwarefreedom.org.
  6. moglenassociates.com/people/
  7. Bench, Bar &. "Mishi Choudhary launches Law & Policy practice". Bar and Bench - Indian Legal news.
  8. "Asia Society Announces 2015 Asia 21 Young Leaders". Asia Society.
  9. "User Profile". AGLN - Aspen Global Leadership Network.
  10. "And The Winners of the Digital Women Awards 2017 Are... - SheThePeople TV".
  11. "The Linux Kernel Archives - About". www.kernel.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஷி_சௌத்ரி&oldid=3285791" இலிருந்து மீள்விக்கப்பட்டது