உள்ளடக்கத்துக்குச் செல்

மிஷன் 90 டேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிஷன் 90 டேஸ்
மிஷன் 90 டேஸ் திரைப்பட குறுவட்டு உறை
இயக்கம்மேஜர் ரவி
தயாரிப்புசசி அய்யஞ்சிரா
திரைக்கதை
  • மேஜர் ரவி
  • எஸ். திரு
  • ஷிஜு நம்பியாத் (உரையாடல்)
இசைஜெய்சன் ஜே நாயர்
நடிப்புமம்மூட்டி
துலிப் ஜோஷி
லாலு அலெக்ஸ்
இன்னொசென்ட்
பாபுராசு
ராதிகா
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புஜெயசஞ்சர்
வெளியீடு12 சூலை 2007 (2007-07-12)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மிஷன் 90 டேஸ் (Mission 90 Days) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழித் திரைப்படமாகும். இதை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் முன்னாள் கமாண்டோ மேஜருமான ஏ. கே. ரவீந்திரன் இயக்கினார். இப்படத்தில் மம்மூட்டி நடித்தார். இது மேஜர் ரவி இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் என்று கருதப்படுகிறது. இது முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் படுகொலையையும், அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையையும் அடிப்படையாகக் கொண்டது. [1] [2]

கதைக்களம்

[தொகு]

இராஜீவ் காந்தி 1991 மே 21 அன்று தமிழ்நாட்டின் திருபெரும்புதூரில் படுகொலை செய்யப்படுகிறார். ஒரு நாள் கழித்து இந்திய அரசு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIT) ஒன்றை அமைக்கிறது. மேலும் உயர் புலனாய்வு அதிகாரியும் நிரூபிக்கப்பட்ட பதிவுகளைக் கொண்ட தே. பா. ப அதிரடி வீரருமான மேஜர் சிவராம் கொலையாளிகளை வேட்டையாடும் பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார். அவரது மேலதிகாரிகளான சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பார்த்திபன், காவல்துறைத் துணைத்தலைவர் ராஜு ஆகியோர் "சயனைடு குப்பியை கடிப்பதற்கு முன்பு சிவராசனை உயிருடன் பிடிக்கவேண்டும்" என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் அவருக்குத் தேவையான அனைத்து தர்க்கரீதியான ஆதரவைகளையும் வழங்குகிறனர்.

முருகன், நளினி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களை விசாரணை வளையத்துக்குக் கொண்டவந்த பிறகு, சிவராம் தனது நுணுக்கமான தேடலின் காரணமாக வழக்கை ஒரு கோர்வைக்குள் கொண்டுவருகிறார். பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருக்கும் சிவராசனை நோக்கி குழுவை அழைத்துச் செல்கிறார். கதையின் மையக்கரு படத்தின் கடைசி 15 நிமிட உச்சக்கட்டமாகும். சிவராமும் அவரது குழுவினரும் அமைதியாகவும், திருட்டுத்தனமாகவும் நகர்ந்து கொலையாளிகள் தங்கியிருக்கும் வீட்டை சுற்றிவளைக்கின்றனர். இருளின் மறைவின் கீழ் இறுதித் தாக்குதலுக்காக அவர்கள் நகர்கின்றனர். தில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகளிடமிருந்து நடவடிக்கைகளைத் தொடங்க வரும் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர்.

ஆனால் தில்லியில் உள்ள அதிகாரவர்கத்தினர் அதை தாமதப்படுத்த விரும்புகின்றனர். தாமதப்படுத்தி பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் சிவராசனை உயிருடன் பிடித்த பெருமையை பெற விரும்புகின்றனர். நடவடிக்கையைத் தொடங்குவதற்கான உத்தரவுக்காக இரவு முழுவதும் மேஜர் சிவராம் காத்திருக்கிறார். உயரதிகாரிகள் மறுநாள் காலை 10 மணிக்கு வருகின்றனர். அப்போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும், குழப்பமான கருநாடக காவல்துறையினரின் முன்னிலையில் நடவடிக்கைக்கு உத்தரவு வழங்கப்படுகிறது. வீட்டில் பதுங்கி இருந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சயனைடைக் கடித்து இறந்ததையும், அதிரடிப் படையினர் உள்ளே நுழைவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, சிவராசன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மடிகிறார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர்
ஷான் ஹை தூ சஜத், ஃபர்ஹாத் சஜத், ஃபர்ஹாத் ஷாலினி சிங்
மிழிநீரு பொழியும்போழும் வயலார் சரத்சந்திர வர்மா ஜெய்சன் ஜே நாயர் நஜிம் அர்ஷத்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mammootty shines in Mission".
  2. "Mission 90 Days". சிஃபி. Archived from the original on 15 June 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஷன்_90_டேஸ்&oldid=4360800" இலிருந்து மீள்விக்கப்பட்டது