மிலிந்த் ராம்ச்சி நரோட்டு
மிலிந்த் ராம்ச்சி நரோட்டு (Milind Ramji Narote) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1985 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பட்டியல் பழங்குடி சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட கட்சிரோலி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2] 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[3][4]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]மிலிந்த் ராம்ச்சி நரோட்டு மகாராட்டிராவின் கட்சிரோலியைச் சேர்ந்தவர் ஆவார். இராம்ச்சி நரோட்டு இவருடைய தந்தையாவார். 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள என்.பி.கே. சால்வி மருத்துவக் கல்வி நிறுவனத்தில் தனது இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தார்.[1]
தொழில்
[தொகு]2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சிரோலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இத்தேற்தலில் மிலிந்த் ராம்ச்சி நரோட்டு 116,540 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மனோகர் துளசிராம் போரெட்டியை 15,505 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Dr. Milind Ramji Narote(Bharatiya Janata Party(BJP)):Constituency- GADCHIROLI (ST)(GADCHIROLI) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-11-26.
- ↑ "गडचिरोलीत भाजपकडून विद्यमान आमदार होळींना डच्चू, डॉ. मिलिंद नरोटे यांना उमेदवारी; 'लोकसत्ता'चे भाकीत खरे ठरले". Loksatta (in மராத்தி). 2024-10-26. Retrieved 2024-11-26.
- ↑ "Dr. Milind Ramji Narote , BJP Election Results LIVE: Latest Updates On Dr. Milind Ramji Narote , Assembly Election Constituency Seat". ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2024-11-26.
- ↑ "गडचिरोलीत भाजपने भाकरी फिरवली, सलग दोनदा निवडून आलेल्या आमदाराला डच्चू; 'या' तरुण डॉक्टरला संधी". Maharashtra Times (in மராத்தி). Retrieved 2024-11-26.
- ↑ "Gadchiroli, Maharashtra Assembly Election Results 2024 Highlights: BJP's Dr. Milind Ramji Narote defeats INC's Manohar Tulshiram Poreti with 15505 votes". India Today (in ஆங்கிலம்). 2024-11-23. Retrieved 2024-11-26.
- ↑ "Dr. Milind Ramji Narote, BJP Candidate from Gadchiroli Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-11-26.