மிர்-650 நுண்ணிய ஆர் என் ஏ முன்னோடி குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூறு உயிரியலில் மிர்-650 குறு ஆர் என் ஏ என்பது குட்டையான ஆர் என் ஏ மூலக்கூறு ஆகும். பல்வேறு இயந்திரநுட்பத்தின்போது மற்ற மரபன்களின் பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குப்படுத்தும் பணியை நுண் ஆர்.என்.ஏ செய்கிறது.

நீரிழிவு மற்றும் நீரிழிவு இதய கோளாறு[தொகு]

நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத இதயச் செயலிழப்பு உள்ள மாற்றம், வெளிப்பாட்டு அளவு ஆறு நுண் ஆர்.என்.ஏ க்களின் ஒரு குழுவைச் சார்ந்துள்ளதுவாகும். இந்த மாற்றப்பட்ட வெளிப்பாடு பல்வேறு தூய்மிப்பு இதயச் செயலிழப்புகளுடன் தொடர்புடையது [1]

நாள்பட்ட நிணநீர்முகை குருதி வெண்புற்று[தொகு]

மிர்-650 நாட்பட்ட நிணநீர்முகை குருதி வெண்புற்றிலும் இயல்பு பி-நிணநீர்க்கல உடலியலிலும் முதன்மைப் பாத்திரம் வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் உயர்ந்த மட்ட வெளிப்பாட்டின்போது மிகவும் சாதகமான நிணநீர்முகை குருதி வெண்புற்று முன்கணிப்புகளுடன் தொடர்புடையது. கூடுதலாக, இது புரதங்கள் CDK1, ING4வ் EBF3 ஆகியவற்றை இலக்காக கொண்டு பி-கலங்களில் பரவு திறனைக் கட்டுபடுத்துகிறது (தொடக்கநிலை B- காரணி 3).[2][3]

NDRG2ஒழுங்குபடுத்துதல்[தொகு]

மிர் -650 மேலும் NDRG2 மரபணுவின் முன்னேற்றகரமான பகுதியில் ஒரே மாதிரியான டி.என்.ஏ வட்டாரத்தை இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்த மரபணுவின் நேரடி கட்டுப்பாடு படியடுத்தல் மட்டத்தில் உள்ளது, இது NDRG2 வெளிப்பாட்டை அடக்குவதற்கு வழிவகுக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]