மிர்பூர் சமணக் கோயில்

ஆள்கூறுகள்: 24°51′27″N 72°48′23″E / 24.857469°N 72.806396°E / 24.857469; 72.806396
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர்பூர் சமணர் கோயில்
மிர்பூர் சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மிர்பூர், சிரோகி, இராஜஸ்தான், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்24°51′27″N 72°48′23″E / 24.857469°N 72.806396°E / 24.857469; 72.806396
சமயம்சமணம்

மிர்பூர் சமணக் கோயில் (Mirpur Jain Temple), இந்தியாவின் மாநிலமான இராஜஸ்தானின், சிரோகி மாவட்டத்தில் உள்ள மிர்பூர் கோட்டை நகரத்தில் அமைந்த நான்கு சமணக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில் மூலவரான பார்சுவநாதர் ஐந்து தலை நாகங்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.

அமைவிடம்[தொகு]

மிர்பூர் சமணர் கோயில் இராஜஸ்தானின் சிரோகி நகரத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும்; அபு மலை சாலையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் உள்ளது.

வரலாறு[தொகு]

மிர்பூர் சமணக் கோயில்கள் கிபி 9ஆம் நூற்றாண்டில் இராஜபுத்திர மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் 13வது நூற்றாண்டில், குஜராத் சுல்தான் முகமது பேக்டா என்பவரால் அழிக்கப்பட்டது. 15ம் நூற்றாண்டில் இக்கோயில் மீண்டும் கட்டி மறுசீரமைக்கப்பட்டது.

சமண சமய 23வது சமணத் தீர்த்தரங்கரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலை, சுவேதாம்பரர் சமணப் பிரிவின் சேத் கல்யாண்ஜி பரமானந்தஜி பீடம் இக்கோயிலை நிர்வகித்து வருகிறது. இக்கோயில் தில்வாரா சமணர் கோயில் மற்றும் ராணக்பூர் சமணர் கோயில்கள் போன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது கோயிலின் முக்கியப் பகுதி, மண்டபத்துடன் கூடிய உயர்ந்த பீடத்தில் உள்ளது. பீடம் அழகிய சிற்பங்களுடன் கூடியுள்ளது.[1][2]

இதனையும் காண்க[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
  2. http://www.jinalaya.com/rajasthan/mirpur.htm |date=June 2016
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mirpur Jain Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்பூர்_சமணக்_கோயில்&oldid=3567640" இலிருந்து மீள்விக்கப்பட்டது