உள்ளடக்கத்துக்குச் செல்

மிர்பூர் காஸ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°33′02″N 069°00′11″E / 25.55056°N 69.00306°E / 25.55056; 69.00306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர்பூர் காஸ் மாவட்டம்
ضلع میرپور خاص
ميرپور خاص ضلعو
மாவட்டம்
கீழ்: சித்தோரி கல்லறைகள்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மிர்பூர் காஸ் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மிர்பூர் காஸ் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°33′02″N 069°00′11″E / 25.55056°N 69.00306°E / 25.55056; 69.00306
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
கோட்டம்மிர்பூர் காஸ் கோட்டம்
நிறுவிய ஆன்டு31 அக்டோபர்1990
தலைமையிடம்மிர்பூர் காஸ்
வருவாய் வட்டங்கள்
07
  • ஜுட்டோ வட்டம்
    மிர்பூர் காஸ் வட்டம்
    திக்கிரி வட்டம்
    ஹசன் பக்ஸ் மர்ரி வட்டம்
    கோட் குலாம் முகமது வட்டம்
    சிந்திரி வட்டம்
    சூஜாபாத் வட்டம்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்)
 • நாடாளுமன்றத் தொகுதிகள்NA-211 மிர்பூர் காஸ்-I
NA-212 மிர்பூர் காஸ்-II
பரப்பளவு
 • மாவட்டம்2,925 km2 (1,129 sq mi)
ஏற்றம்
17 m (56 ft)
மக்கள்தொகை
 • மாவட்டம்16,81,386
 • அடர்த்தி570/km2 (1,500/sq mi)
 • நகர்ப்புறம்
4,92,175
 • நாட்டுப்புறம்
11,89,211
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    45.37%
  • ஆண்
    55.04%
  • பெண்:
    34.75%
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு எண்
69000
தொலைபேசி குறியீடு எண்233
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK

மிர்பூர் காஸ் மாவட்டம் (Mirpur Khas District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் மிர்பூர் காஸ் கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மிர்பூர் காஸ் நகரம் ஆகும். மிர்பூர் காஸ் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 232 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,267கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கஹு-ஜோ-தாரோ புத்த நினைவுச் சின்னங்கள் உள்ளது. உலகின் 10 சிறந்த மாம்பழ வகைகளில் ஒன்று இம்மாவட்டத்தில் விளைகிறது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

மிர்பூர் காஸ் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது:[3]

  • ஜுட்டோ வட்டம்
  • மிர்பூர் காஸ் வட்டம்
  • திக்கிரி வட்டம்
  • ஹசன் பக்ஸ் மர்ரி வட்டம்
  • கோட் குலாம் முகமது வட்டம்
  • சிந்திரி வட்டம்
  • சூஜாபாத் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 312,986 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை ஆகும் 1,681,386.[4]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 110.36 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 45.37% ஆகும்[1][5] . இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 537,553 (31.98%) ஆக உள்ளனர்.[6]நகர்புறங்களில் 492,175 (29.27%) மக்கள் வாழ்கின்றனர்.[1]

சமயம்

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 57.99% மக்களும், இந்து சமயத்தை 41.48% மக்களும், கிறித்துவ சமயத்தை 0.42% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.11% மக்களும் பின்பற்றுகின்றனர்[7].

மொழி

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் உருது மொழியை 11.93%, பஞ்சாபி மொழியை 6.27%, சிந்தி மொழியை 73.7%, பலூச்சி மொழியை 1.65%, இந்த்கோ மொழியை 1.63%, பிற மொழிகளை 4.82% மக்கள் பேசுகின்றனர்[8].

படக்காட்சிகள்

[தொகு]

மிர்பூர் காஸ் மாவட்டத்திலுள்ள பௌத்த தூபி மற்றும் நினைவுச்சின்னங்கள்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
  3. Correspondent, The Newspaper's (2012-12-13). "New taluka in Mirpurkhas notified". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2024-01-16. {{cite web}}: |last= has generic name (help)
  4. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்பூர்_காஸ்_மாவட்டம்&oldid=4324407" இலிருந்து மீள்விக்கப்பட்டது