மிருணாள் குல்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருணாள் தியோ-குல்கர்னி
பிறப்பு21 சூன் 1971 (1971-06-21) (அகவை 52)[1]
புனே, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
அறியப்படுவதுமீராபாய்
சோன் பாரி
பெற்றோர்விஜய் தியோ (தந்தை)
வீணா தியோ (தாய்)
வாழ்க்கைத்
துணை
Ruchir Kulkarni (தி. 1990)
பிள்ளைகள்விராஜாஸ் குல்கர்னி (பி. 1992)[2]
உறவினர்கள்ஜெய்ராம் குல்கர்னி (மாமனார்)

மிருணாள் தியோ-குல்கர்னி (Mrinal Deo-Kulkarni) என்பவர் ஓர் இந்திய நடிகை மற்றும் இயக்குநராவார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்ததற்காக அறியப்படுகிறார்.[3] தூர்தர்ஷனில் மீராபாய் பாத்திரத்தில் நடித்ததற்காகவும், ஸ்டார் பிளசின் சன் பாரியில் தேவதையாக நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

இவர் மராத்திய மொழி மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி[தொகு]

இவர் புனேயில் ஒரு மராத்தி கொங்கனஸ்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்டர் விஜய் தியோ மற்றும் டாக்டர் வீணா டியோ ஆவர். இவர் புனே பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவருக்கு மதுரா என்ற சகோதரி உள்ளார். நோய்வாய் பட்ட இவரது தந்தை 2019 ஏப்ரல் 11 அன்று இறந்தார்.[4]

இவர் 1990 இல் தனது குழந்தை பருவ நண்பரான ருசிர் குல்கர்னியை மணந்தார். இவர்களுக்கு விராஜாஸ் என்ற மகன் உள்ளார். விராஜாஸ் மராத்தி திரையுலகில் பணியாற்றி வருகிறார்.[5][6]

நடிப்பு வாழ்க்கை[தொகு]

மராத்தி தொலைக்காட்சித் தொடரான ஸ்வாமியில் பேஷ்வா மாதவராவின் மனைவி ரமாபாய் பேஷாவே வேடத்தில் நடித்ததன் மூலம் மிருணாள் தன் 16 வயதில் நடிப்புத் துறையில் அறிமுகமானார். இது இவருக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது. இந்தத் தொடரில் மாதவராவ் வேடத்தில் ரவீந்திர மங்கனி நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் பெரிதாக அக்கறை காட்டாமல், மெய்யியலில் முனைவர் பட்டத்தை முடிக்க விரும்பினார். ஆனால் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன, இறுதியாக இவர் 1994 இல் நடிப்பில் ஈடுபட முடிவு செய்தார். ஸ்ரீகாந்த் ( சரத்சந்திர சாட்டர்ஜியின் புதினங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர்), தி கிரேட் மராத்தா, திரௌபதி, ஹஸ்ரடீன், மீராபாய், டீச்சர், கேல், ஸ்பர்ஷ், சோன்பாரி உட்பட பல வெற்றிகரமான பாத்திரங்களைப் பெற்று இவர் நடிப்பைத் தொடர்ந்தார். ஆல்பா மராத்தி தொலைக்காட்சி அலைவரிசையில் அவந்திகா என்ற தொடரில் இவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மீராபாய், திரௌபதி, அகில்யா பாய் ஒல்கர், ரமாபாய், ஜிஜாபாய் போன்ற பல வரலாற்றுப் பாத்திரங்களில் நடித்ததற்காக மிருணாள் பிரபலமானவர்.  இவர் இதுவரை 22 இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செய்துள்ளார். இவர் இயக்கத்தில் கவனம் செலுத்த தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதை நிறுத்தினார்.

இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

மிருணாள் குல்கர்னி மராத்தி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இயக்கம்[தொகு]

பிரேம் மஞ்சே... பிரேம் மஞ்சே.... பிரேம் அஸ்டா என்ற மராத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மிருணாள் குல்கர்னி. படத்தை இயக்கியது மட்டமல்லாமல் படத்திற்கான கதையையும் மிருணால் குல்கர்னி எழுதினார்.[7] அதன் பிறகு மராத்தி வரலாற்று நாடகப் படமான ராம மாதவ் படத்தையும் இயக்கினார்.[8]

எழுதி இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

 • ராமா மாதவ் - 2014
 • பிரேம் ம்ஹஞ்சே பிரேம் ம்ஹஞ்சே பிரேம் அஸ்டா - 2013
 • டிஐ அண்ட் டிஐ - 2019

தொலைக்காட்சி விளம்பரம்[தொகு]

 • பிரபலமான தொலைக்காட்சி விளம்பரமான விக்கோ மஞ்சள் ஆயுர்வேதி தோல் குழைமம் [9]

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

குல்கர்னி பின்வரும் விருதுகளை வென்றுள்ளார்-

 1. 2001 மராத்தி திரைப்படமான ஜோதிடரில் (2000) நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான திரை விருது .
 2. சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் மராத்தியில் மூன்று பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

 1. "I club nature and history on my birthdays: Mrinal Kulkarni". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-06-20. பார்க்கப்பட்ட நாள் 2023-12-13.
 2. "Maza Hoshil Na fame Virajas Kulkarni: My approach towards TV industry was different because of my mom Mrinal Kulkarni". The Times of India (in ஆங்கிலம்). 9 March 2020. Archived from the original on 14 April 2021. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
 3. "संमेलनाध्यपद महिलेला मिळेल - अभिनेत्री मृणाल कुलकर्णी". Maharashtra Times (in மராத்தி). Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
 4. "Pune loses a noted politics professor, in the passing away of Vijay Deo". Archived from the original on 12 April 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2019.
 5. "Happy Birthday Mrinal Kulkarni! 5 Lesser Known Facts About The Ye Re Ye Re Paisa Actress". Zee Marathi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 April 2020.
 6. "Mrinal Kulkarni's son to make his acting debut - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 14 April 2020.
 7. "Mrunal Kulkarni's debut directorial PREM MHANJE PREM MHANJE PREM ASATE is a matured love story - GlamGold". Glamgold.com. 2 August 2012. Archived from the original on 15 October 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
 8. "Rama Madhav: A new movie that captures love in the time of Peshwas". Daily News and Analysis. 3 August 2014. Archived from the original on 15 October 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
 9. "When Vicco Turmeric 'nahi cosmetic' spread the love". ETBrandEquity. 11 December 2021. Archived from the original on 7 February 2023. பார்க்கப்பட்ட நாள் 28 January 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mrinal Kulkarni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருணாள்_குல்கர்னி&oldid=3944610" இலிருந்து மீள்விக்கப்பட்டது