மிருசுவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிருசுவில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலேரியும், கிழக்கு எல்லையில் எழுதுமட்டுவாளும், தெற்கில் உசனும், மேற்கில் நாவற்காடு, குடமியான், கொடிகாமம் ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மிருசுவில் வடக்கு, மிருசுவில் தெற்கு என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் தெற்கு எல்லையை அண்டிச் செல்கிறது. இவ்வீதியின் வழி சாவகச்சேரியில் இருந்து இவ்வூர் சுமார் 12 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கொடிகாமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு தொடர்வண்டிப் பாதையும் இருந்ததுடன் இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்திருந்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருசுவில்&oldid=2774235" இலிருந்து மீள்விக்கப்பட்டது