உள்ளடக்கத்துக்குச் செல்

மியூவோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியூவோன்
Muon
வளிமண்டலத்தில் உள்ள அண்டக் கதிர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாம் நிலை மியூயான்களில் காணப்படுவது போலவும், சவுடான் 2 உணர்த்துக் கருவியில் தரையில் இருந்து 700 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது போலவும் சந்திரனின் அண்டக் கதிர் நிழல்.
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்பெர்மியான்
தலைமுறைஇரண்டாம்
இடைவினைகள்ஈர்ப்பு விசை, மின்காந்தம்,
மெலிதான
குறியீடுμ
எதிர்த்துகள்எதிர்மியூவான் (μ+)
கண்டுபிடிப்புகார்ல் டி. ஆன்டர்சன், செத் நெதர்மெயர் (1936)
திணிவு1.883531627(42)×10−28 kg[1]
0.1134289257(22) Da[2]
105.6583755(23) MeV/c2[3]
சராசரி வாழ்வுக்காலம்2.1969811(22)×10−6 s[4][5]
சிதைவுe, ν
e
, ν
μ
[5] (மிகவும் பொதுவானவை)
மின்னூட்டம்−1 e
வண்ண ஏற்றம்எதுவுமில்லை
சுழற்சி1/2 ħ
வலுவற்ற சமதற்சுழற்சிLH: −1/2, RH: 0
வலுவற்ற மீஉயர் ஊட்டம்LH: −1, RH: −2

மியூவோன் (muо́n, μ என்ற கிரேக்க எழுத்தால் தரப்படும்) அல்லது மியூவான் என்பது எதிர்மின்னியைப் போன்ற ஒரு அடிப்படைத் துகள் ஆகும். இது எதிர்மின்னியைப் போலவே −1 e மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதுடன் -1/2 சுழற்சியையும் கொண்டது. ஆனால் எதிர்மின்னியுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய நிறை (திணிவு) கொண்டது. இது ஒரு மென்மி (லெப்டான்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மென்மிகளைப் போலவே, மியூவோனும் வேறெந்த எளிய துகள்களாலும் ஆக்கப்பட்டிருப்பதாக கருதப்படவில்லை.

மியூவோன் ஆனது 2.2μs சராசரி ஆயுட்காலம் கொண்ட ஒரு நிலையற்ற துணை அணுத்துகள் ஆகும். இதனது ஆயுட்காலம் மற்றைய பல துணை அணுத்துகள்களைவிட மிக நீண்டது. மியூவோன் தேய்வடையும் பொழுது, எப்போதும் குறைந்தது மூன்று துகள்களை உருவாக்குகிறது. இதில் மியூவோனின் அதே மின்னேற்றத்தைக் கொண்ட எதிர்மின்னி கட்டாயம் உள்ளடங்கியிருப்பதோடு இரண்டு வகையான நியூட்ரினோக்களும் இருக்கும்.

எல்லா அடிப்படைத் துகள்களைப் போலவே, மியூவோனுக்கும் எதிர் மின்னேற்றம் (+1 e) கொண்ட, ஆனால் சமமான திணிவும் சுழற்சியும் கொண்ட ஒரு எதிர்த்துகளான எதிர்மியூவோன் இருக்கிறது. மியூவோன்கள் μ ஆல் குறிக்கப்படுவதுடன் எதிர்மியூவோன்கள் μ+ ஆல் குறிக்கப்படுகிறது. முன்பு, மியூவோன்கள் மியூ மேசான்கள் என்று அழைக்கப்பட்டன. ஆனால் நவீன துகள் இயற்பியலாளர்களால் அவை மேசான்களாக வகைப்படுத்தப்படாததால், தற்காலத்தில் இயற்பியல் சமூகத்தில் அந்தப்பெயர் வழக்கில் இல்லை.

மியூவோன்களின் திணிவு 105.66 MeV/c2 ஆகும். இது எதிர்மின்னியின் திணிவான me இனை விட சுமார் 206.7682827(46)[6] மடங்கு அதிகமானது. மூன்றாவது மென்மியான τ, மியூவோனை விட சுமார் 17 மடங்கு அதிக திணிவைக் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2022 CODATA Value: muon mass". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  2. "2022 CODATA Value: muon mass in u". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  3. "2022 CODATA Value: muon mass energy equivalent in MeV". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  4. Beringer, J.; et al. (Particle Data Group) (2012). "Leptons (e, mu, tau, ... neutrinos ...)" (PDF). PDGLive Particle Summary. Particle Data Group. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2013.
  5. 5.0 5.1 Patrignani, C. (2016). "Review of Particle Physics". Chinese Physics C 40 (10): 100001. doi:10.1088/1674-1137/40/10/100001. Bibcode: 2016ChPhC..40j0001P. http://bib-pubdb1.desy.de/record/311549/files/cpc_40_10_100001.pdf. 
  6. "2022 CODATA Value: muon-electron mass ratio". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியூவோன்&oldid=4185802" இலிருந்து மீள்விக்கப்பட்டது