உள்ளடக்கத்துக்குச் செல்

மியூனிக் படுகொலை

ஆள்கூறுகள்: 48°10′47″N 11°32′57″E / 48.17972°N 11.54917°E / 48.17972; 11.54917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியூனிக் படுகொலை
Part of இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு
இஸ்ரேலிய ஒலிம்பிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தூதுக்குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியூனிக் ஒலிம்பிக் கிராம கட்டிடம் 31 உடன் இணைக்கப்பட்ட பால்கனியில் ஒரு கடத்தல்காரரைக் காட்டுகிறது.[1][2]
நிகழ்விடம்மியூனிக், பவேரியா, மேற்கு ஜெர்மனி
ஆள்கூறுகள்48°10′47″N 11°32′57″E / 48.17972°N 11.54917°E / 48.17972; 11.54917
நாள்5–6 செப்டம்பர் 1972
4:31 am – 12:04 am (UTC+1)
இலக்குஇஸ்ரேல் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவினர்
தாக்குதல் வகை
  • பணயக் கைதிகளாக பிடித்தல்
  • துப்பாக்கிச் சூடு
  • படுகொலை செய்தல்
இறப்பு(கள்)மொத்தம்17 (விளையாட்டுக் குழுவினர் 12, பயங்கரவாதிகள் 5
  • 6 இஸ்ரேலிய விளையாட்டுப் பயிற்சியாளர்கள்
  • 5 இஸ்ரேலிய தடகள வீரர்கள்
  • 1 மேற்கு ஜெர்மனி காவல்துறை அதிகாரி
  • 5 பாலஸ்தீன பயங்கரவாதிகள் (கருப்பு செப்டம்பர் அமைப்பின் உறுப்பினர்கள்)
Perpetrator(s)கருப்பு செப்டம்பர் அமைப்பு

மியூனிக் படுகொலை, அன்றைய மேற்கு ஜெர்மனி நாட்டின் தெற்கில் அமைந்த பவேரியா மாநிலத் தலைநகரான மியூனிக் நகரத்தில் நடைபெற்ற 1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, 5–6 செப்டம்பர் 1972 அன்று விளையாட்டு கிராமத்தில் உறங்கிக் கொண்டிருந்த இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவினரை அதிகாலை 4:30 மணி அளவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் அமைப்பினர்[3][4][5] பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து, இறுதியில் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 6 இஸ்ரேலிய விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் 5 இஸ்ரேலிய தடகள வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[6][7][8][9]

இஸ்ரேலிய விளையாட்டுக் குழுவினர் மீது பயரஙகரவாதிகள் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, கருப்பு செப்டம்பர் அமைப்பின் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 234 கைதிகளை விடுவிக்கவும்[10], ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செம்படை பிரிவின் நிறுவனர்களான ஆண்ட்ரியாஸ் பாடர் மற்றும் உல்ரிக் மெய்ன்ஹாஃப் ஆகியோரை விடுவிக்கவும் கோரினர். பின்னர் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகளும், ஒரு காவல் அதிகாரியும் கொல்லப்பட்டனர். மூன்று பயங்கரவாதிகள் சிறை பிடிக்கப்பட்டனர்.

பின் விளைவுகள்

[தொகு]

செப்டம்பர் 6 அன்று படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒலிம்பிக் கொடி மற்றும் பல நாடுகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது; இருப்பினும், பத்து அரபு நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பிறகு, அவர்களின் கொடிகள் மட்டும் பறக்க விடப்பட்டது.

செப்டம்பர் 8, 1972 அன்று சிரியா மற்றும் லெபனானில் இருந்த 10 பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். பிடிபட்ட மூன்று பயங்கரவாதிகள் முனிச்சில் சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 29, 1972 அன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பினர் லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானத்தை கடத்தினர். இதனால் கைது செய்யப்பட்டிருந்த 3 கருப்பு செப்டம்பர் அமைப்பினரை ஜெர்மன் அரசு விடுவித்தது. "கடவுளின் கோபம்" என்ற பெயரில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் எடுத்த நடவடிக்கையால், ஜெர்மனி அரசால் விடுவிக்கப்பட்ட இரண்டு பாலஸ்தீன பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.[11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Breznican, Anthony (22 December 2005). "Messages from 'Munich'". USAToday (Gannett Co.). https://www.usatoday.com/life/movies/news/2005-12-21-munich_x.htm. 
  2. Karon, Tony (12 September 2000). "Revisiting the Olympics' Darkest Day". Time. Archived from the original on 1 October 2007. Retrieved 13 May 2010.
  3. Germany and Israel: Whitewashing and Statebuilding. Oxford University Press. 30 March 2020. p. 146. ISBN 978-0-19-754000-8.
  4. Sylas, Eluma Ikemefuna (2006). Terrorism: A Global Scourge. AuthorHouse. ISBN 978-1-4259-0530-9. Archived from the original on 1 August 2023. Retrieved 7 June 2010.
  5. Black, Ian; Morris, Benny (1991). Israel's secret wars: a history of Israel's intelligence services. New York: Grove Weidenfeld. ISBN 978-0-8021-1159-3.
  6. Juan Sanchez (2007). Terrorism & Its Effects. Global Media. p. 144. ISBN 978-81-89940-93-5. Retrieved 16 December 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Aubrey, Stefan M. (2001). The New Dimension of International Terrorism. vdf Hochschulverlag AG. ISBN 978-3-7281-2949-9. Archived from the original on 1 August 2023. Retrieved 22 June 2010.
  8. Encyclopedia of terrorism. Sage Publications. 2003. p. 248. ISBN 978-0-7619-2408-1. Retrieved 22 June 2010 – via Internet Archive.
  9. Simon, Jeffrey David (1976). The Terrorist Trap: America's Experience with Terrorism. Indiana University Press. ISBN 978-0-253-21477-5. Retrieved 22 June 2010.
  10. "The hostage-takers' demands; Original typewritten English-language communiqués (with German translations) of 'Black September' and the complete name list of the 328 detainees to be released". Fürstenfeldbruck: Fürstenfeldbruck District Office, Munich State Archives, Munich Public Prosecutor's Office. 2022. Retrieved 2024-08-15.
  11. James Montague (5 September 2012). "The Munich massacre: A survivor's story". CNN இம் மூலத்தில் இருந்து 21 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180621070233/https://edition.cnn.com/2012/07/27/sport/olympics-2012-munich-shaul-ladany-survivor. 
  12. "The Mossad's secret wars" (in ஆங்கிலம்). Al Jazeera. 20 February 2010. Archived from the original on 8 August 2017. Retrieved 26 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியூனிக்_படுகொலை&oldid=4373733" இலிருந்து மீள்விக்கப்பட்டது