உள்ளடக்கத்துக்குச் செல்

மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′14.34″N 101°41′14.41″E / 3.1373167°N 101.6873361°E / 3.1373167; 101.6873361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG15  மியூசியம் நெகாரா
| எம்ஆர்டி
மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Muzium Negara MRT Station
Stesen Muzium Negara MRT
国家博物馆
அமைவிடம்டாமன்சாரா சாலை
கோலாலம்பூர் மலேசியா
ஆள்கூறுகள்3°8′14.34″N 101°41′14.41″E / 3.1373167°N 101.6873361°E / 3.1373167; 101.6873361
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
நடைமேடை1 தீவுமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் KA01  KS01  KJ15  KE1  KT1  MR1  கேஎல் சென்ட்ரல் (→) 240-மீ இணைப்பு வழி
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking கேஎல் சென்ட்ரல்
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG15 
வரலாறு
திறக்கப்பட்டது KG15  (MRT) 17 சூலை 2017
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
செமாந்தான்
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
பசார் செனி
காஜாங் நிலையம்
அமைவிடம்
Map

மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Muzium Negara MRT Station; மலாய்: Stesen MRT Muzium Negara) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் அமைந்துள்ளது.

மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின் கீழ் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது. மேலும் இந்த நிலையம் மலேசிய அருங்காட்சியகத்தின் முன்புறத்தில் டாமன்சாரா சாலைக்கு அடியில் உள்ளது.

கோலாலம்பூர் சென்ட்ரல் அருகே அமைந்திருந்தாலும், மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் கோலாலம்பூர் சென்ட்ரல் வளாகத்தின் ஒரு பகுதியாக இல்லை. இருப்பினும், 240 மீட்டர் மூடப்பட்ட பாதசாரி நடைபாதை வழியாக கோலாலம்பூர் சென்ட்ரலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைவு

[தொகு]

மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம்; கோலாலம்பூரின் வரலாற்று நகர மையத்தின் தென்மேற்கே டாமன்சாரா சாலையின் அடியில் அமைந்துள்ளது. இது கோலாலம்பூர் சென்ட்ரல் மேம்பாட்டு வளாகத்திற்கு வடக்கிலும்; மற்றும் அதற்கு அருகிலும் அமைந்துள்ளது.

நிலையத்தின் வடக்கே மலேசிய அருங்காட்சியகம் உள்ளது. அதே வேளையில் நிலையத்தின் தெற்குப் பகுதிக்கு அருகில் மெனாரா சிஐஎம்பி (Menara CIMB), கியூ சென்ட்ரல் (Q Sentral) மற்றும் செயிண்ட் ரெஜிஸ் கோலாலம்பூர் (St Regis Kuala Lumpur) போன்ற கட்டிடங்களும் உள்ளன.

காஜாங் வழித்தடம்

[தொகு]

காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]

எம்ஆர்டி நிறுவனம்

[தொகு]

இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.[2]

நிலைய அமைப்பு

[தொகு]
L1 மியூசியம் நெகாரா தளம் மின்தூக்கி (→) நுழைவாயில் B (→) தெருநிலை
G தெருநிலை நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) டாமன்சாரா சாலை (→) வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள்
B2 இணைப்புவழி கடவுச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள்; வாடிக்கையாளர் சேவை அலுவலகம்; கட்டண வாயில்கள்; நுழைவாயில் C (→) (பாதசாரி இணைப்பு கோலாலம்பூர் சென்ட்ரல்)
B3 நடைமேடை தளம் நடைமேடை 1: 9  காஜாங்  (→)  KG35  காஜாங் (→)
தீவு மேடை
நடைமேடை 2: 9  காஜாங்  (→)  KG04  குவாசா டாமன்சாரா (←)

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A டாமன்சாரா சாலை தெற்குப் பகுதி செயிண்ட் ரெஜிஸ் கோலாலம்பூர், மெனாரா சிஐஎம்பி
B டாமன்சாரா சாலை வடக்குப் பகுதி மலேசிய அருங்காட்சியகம், மலாய் உலக இனவியல் அருங்காட்சியகம், மலேசியாவின் அருங்காட்சியகத் துறை, தாசேக் பெர்டானா, கோலாலம்பூர் மெஜஸ்டிக் தங்கும் விடுதி
C கோலாலம்பூர் சென்ட்ரல் இணைப்புவழி கோலாலம்பூர் சென்ட்ரல், கோலாலம்பூர் இல்டன், கோலாலம்பூர் லா மெரிடான், கியூ சென்ட்ரல், மெனாரா சிஐஎம்பி , பிளாட்டினம் சென்ட்ரல், நு சென்ட்ரல்

கோலாலம்பூர் சென்ட்ரல் நிலைய இணைப்பு

[தொகு]

மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையத்திற்கும் கோலாலம்பூர் சென்ட்ரல் போக்குவரத்து மையத்திற்கும் இடையில் பயணிக்கும் பயணிகள் 240 மீட்டர் பாதசாரி இணைப்பு வழியாக நடந்து செல்ல வேண்டும்; இந்த இணைப்புவழி ஓரளவு உயர்த்தப்பட்டு நிலத்தடியில் உள்ளது. இந்த இணைப்பு RM 50 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.[3]

கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில், பயணிகள் 1 பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம், 2 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம், 5 கிளானா ஜெயா, 6 கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து, 7 கேஎல்ஐஏ போக்குவரத்து மற்றும் 10 கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் ஆகியவற்றுடன் இணைக்க முடியும். கோலாலம்பூர் சென்ட்ரலுடன் இணைக்கப்பட்ட இணைப்பு வழியாக நடந்து செல்வதன் மூலம் 8 கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தையும் அடையலாம்.

காட்சியகம்

[தொகு]

மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் (2022)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  2. "Phileo Damansara MRT station near Menara STAR, HQ of The Star newspaper". klia2.info. 29 January 2019. Retrieved 13 September 2025.
  3. "Linkway for pedestrians between KL Sentral and National Museum MRT Station to open on July 17" (in en). The Sun Daily. 29 June 2017. http://www.thesundaily.my/news/2017/06/29/linkway-pedestrians-between-kl-sentral-and-national-museam-mrt-station-open-july-17. 

வெளி இணைப்புகள்

[தொகு]