உள்ளடக்கத்துக்குச் செல்

மியாவதி நகரம்

ஆள்கூறுகள்: 16°41′16″N 98°30′30″E / 16.68778°N 98.50833°E / 16.68778; 98.50833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியாவதி
မြဝတီ
நகரம்
மியாவதி நகரத் தெரு
மியாவதி நகரத் தெரு
மியாவதி is located in மியான்மர்
மியாவதி
மியாவதி
மியான்மர் நாட்டின் தென்கிழக்கில் மியாவதி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°41′16″N 98°30′30″E / 16.68778°N 98.50833°E / 16.68778; 98.50833
நாடு மியான்மர்
மாநிலம்காயின் மாநிலம்
மாவட்டம்மியாவதி
நகரம்மியாவதி
பரப்பளவு
 • நகரம்1.18 sq mi (3.1 km2)
மக்கள்தொகை
 (2019)[1]
 • நகர்ப்புறம்
55,638
 • பெருநகர்
1,49,510
நேர வலயம்ஒசநே+6.30 (மியான்மர் சீர் நேரம்)

மியாவதி நகரம் (Myawaddy), மியான்மர் நாட்டின் தென்கிழக்கில், தாய்லாந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த எல்லை நகரம் மியான்மரின் காயின் மாநிலத்தில் உள்ள மியாவதி மாவட்டத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. மோயி ஆறு மியாவதி மற்றும் இதனருகில் உள்ள தாய்லாந்து நாட்டின் மே சோட் நகரத்தையும் பிரிப்பதுடன், மியான்மர்-தாய்லாந்து எல்லையாகவும் உள்ளது. மியாவதி நகரம் மியான்மர்-தாய்லாந்து நாடுகளின் எல்லைப்புற வணிக மையமாக உள்ளது.

மியாவதி நகரம் மொன் மாநிலத்தின் தலைநகரான மாவலமயீனி நகரத்திற்கு கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும்; தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கிற்கு வடமேற்கே 426 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

வரலாறு

[தொகு]

மியான்மர் உள்நாட்டுப் போரின் போது 5 ஏப்ரல் 2024 அன்று மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள் மற்றும் காரென் தேசிய விடுதலைப் படைகளும் இணைந்து மியாவதி நகரத்தில் இருந்த மியான்மர் இராணுவத்தினரின் நிலைகளைக் கைப்பற்றியதுடன், 500 இராணுவ வீரர்களையும் போர்க் கைதிகளாகப் பிடித்தனர்.[3][4]10 ஏப்ரல் 2024 அன்று மியாவதியில் மீதமிருந்த மியான்மர் இராணுவத்தினர் பின்வாங்கி தாய்லாந்து எல்லைக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்.[5][6] 24 ஏப்ரல் 2024 அன்று கிளர்ச்சிப் படைகளிடமிருந்து இராணுவம் மீண்டும் மியாவதி நகரத்தைக் கைப்பற்றியது.[7]

பொருளாதாரம்

[தொகு]

மியான்மர்-தாய்லாந்து எல்லைப்புற அதிகாரப்பூர்வ வணிக மையமாக 16 செப்டம்பர் 1998 அன்று மியாவதி நகரம் திறந்து வைக்கப்பட்டது.[8]2022ஆம் ஆண்டில் மியாவதி நகரம், மியான்மரின் இரண்டாவது எல்லைப்புற வணிக மையம் ஆகும்.[9][10][11]மியாவதி நகரம் வழியாக நவரத்தினக் கற்கள் தாய்லாந்திற்கு ஏற்றுமதியாகிறது.[12][13]இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மோரே நகரம் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை மூலம் மியாவதி நகரத்துடன் ஆகஸ்டு 2015ல் இணைக்கப்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மியாவதி நகரத்தின் மக்கள் தொகை 149,510 ஆகும்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Myanmar Information Management Unit (September 2019). Myawaddy Myone Daethasaingyarachatlatmya မြဝတီမြို့နယ် ဒေသဆိုင်ရာအချက်လက်များ [Myawaddy Township Regional Information] (PDF) (Report). MIMU. பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
  2. PCL., Post Publishing. "Bangkok Post article". www.bangkokpost.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-05.
  3. Myanmar military loses border town in another big defeat. April 6, 2024. BBC. Jonathan Head. பரணிடப்பட்டது ஏப்பிரல் 6, 2024 at the வந்தவழி இயந்திரம்
  4. Now, Myanmar (2024-04-08). "Hundreds of Myanmar junta troops surrender as KNU captures base near Myawaddy". Myanmar Now (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
  5. AFP. "Myanmar Junta Troops Withdraw From Myawaddy Following Clashes".
  6. Quinley, Caleb. "A sanctioned strongman and the 'fall' of Myanmar's Myawaddy". Al Jazeera (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-26.
  7. Paddock, Richard C. (24 April 2024). "Myanmar's Junta Recaptures Town That Was a Significant Gain for Rebels". https://www.nytimes.com/2024/04/24/world/asia/myanmar-junta-rebels-myawaddy.html. 
  8. "Border Trade Posts". Ministry of Commerce. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  9. "Myawaddy Border Trade Continues Despite Clashes". Myanmar Business Today. https://www.mmbiztoday.com/articles/myawaddy-border-trade-continues-despite-clashes. 
  10. Lewis, Simon (2015-02-15). "New highway is more than just a road for Myanmar". Nikkei Asia (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
  11. Wongcha-um, Panu (18 April 2024). "In a rebel-held Myanmar town, fragile unity pushes junta to the brink". Reuters. பார்க்கப்பட்ட நாள் 21 May 2024.
  12. Chien, Choo Tse (2004) "Border Areas & Into Burma Photo Gallery" at pbase.com, archived here on 9 February 2005 by Internet Archive
  13. Naylor, Thomas (2009) "The underworld of gemstones Part II: in the eye of the beholder" Crime, Law and Social Change 53(3): 211–227, எஆசு:10.1007/s10611-009-9221-1
  14. "မြဝတီမြို့နယ် အစီရင်ခံစာ" [Myawaddy Township report] (in பர்மீஸ்). Myanmar Population and Housing Census. March 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியாவதி_நகரம்&oldid=4184237" இலிருந்து மீள்விக்கப்பட்டது