உள்ளடக்கத்துக்குச் செல்

மியார்கைரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியார்கைரைட்டு
Miargyrite
மியார்கைரைட்டு, சான் கெனோரோ சுரங்கம், கேசுட்ரோவிர்ரீய்னா மாவட்டம், பெரு (அளவு: 6.1 x 4.2 x 2.7 cm).
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுAgSbS2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவு
மோவின் அளவுகோல் வலிமை2-2 12
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒப்படர்த்தி5.2
மேற்கோள்கள்[1][2][3]

மியார்கைரைட்டு (Miargyrite) என்பது AgSbS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். வெள்ளி, ஆண்டிமனி ஆகிய தனிமங்களின் சல்பைடு உப்பே மியார்கைரைட்டு என வகைப்படுத்தப்படுகிறது. கியூபோர்கைரைட்டு கனிமத்தினுடைய இரண்டாவது வடிவம் மியார்கைரைட்டு என கருதப்படுகிறது. 1824 ஆம் ஆண்டு செருமனியின் பிரீல்பெர்க்கு மாவட்டத்தில் அசலாக இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து வெள்ளி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் பலவற்றிலும் இது காணப்பட்டது. வழக்கமாக தாழ்வெப்பநிலை நீர்வெப்ப படிவுகளில் தோன்றும் மியார்கைரைட்டு கருப்பு நிறத்தில் உலோகத்தன்மை கொண்ட படிகங்களாக கிடைக்கிறது. அடர் சிவப்பு நிற உள்ளக எதிரொளிப்பை வெளிப்படுத்துகிறது. படிகத்தின் கீற்றும் சிவப்பு நிறத்தை காட்டுகிறது.

சிறிய என்ற பொருள் கொண்ட கிரேக்க மொழிச் சொல்லான் மியோன் என்பதிலிருந்தும் வெள்ளி என்ற பொருள் கொண்ட ஆர்கைரோசு என்ற சொல்லில் இருந்தும் மியார்கைரைட்டு என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி சல்பைடுகளிலுள்ள வெள்ளியை விட இதன் வெள்ளி அளவு குறைவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியார்கைரைட்டு&oldid=2975478" இலிருந்து மீள்விக்கப்பட்டது