மியான்மர் சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
மியான்மர் சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. nitidulus
இருசொற் பெயரீடு
Mus nitidulus
பிளைத், 1859

மியான்மர் சுண்டெலி (Mus nitidulus-மசு நித்துலசு) என்பது மத்திய மியான்மரில் காணப்படும் மசு பேரினத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான கொறித்துண்ணி சிற்றினமாகும்.

தோற்றம்[தொகு]

இந்த சிற்றினத்தின் பெயர் 1859ஆம் ஆண்டிற்கு முந்தையது. மசு நித்துலசு, மசு செர்விகலரில் இருந்து ஒரு தனி சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது ஆகும். 2007-ல், முக்கியமாக புதிய மாதிரிகள் மீதான மரபணு ஆராய்ச்சியின் காரணமாக, ம. நித்துலசு தனிச் சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டது. இது ம. செர்விகாலர் விட ம. பூடுகாவுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையவை. மரபணு தரவுகளின் அடிப்படையில், ம. நித்திலசு 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிற்றினத்தின் பரவலானது ஐராவதி ஆற்றின் கீழ்ப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதியை உள்ளடக்கியது.

விளக்கம்[தொகு]

ம. நித்திலசு நடுத்தர அளவிலான சுண்டெலியாகும். மென்மையான, மெல்லிய, நெகிழ்வான, வெளிப்படையான மீசை முடிகளுடையது. இது ம. செர்விகாலர் மற்றும் ம. பிராஜிலிகாடா போன்று தோற்றமளிக்கின்றது. உடலின் அடிப்பகுதி வெளிர் சாம்பல் நிறமாகவும், கன்னங்கள் மற்றும் மூக்கின் பக்கங்களும் வெண்மையாகவும் இருக்கும். இது பெரிய, முடிகளுடன் கூடிய காதுகளைக் கொண்டுள்ளது. இதன் பாதங்கள் வெண்மை நிறமுடையன; ஆனால் சில நேரங்களில் கருப்பு முடிகள் காணப்படும். இதனுடைய நீளம் 73 முதல் 93 மி.மீ. வரை இருக்கும். எடை 16.2 முதல் 18 கிராம் வரை மாறுபடும். இவை பக்கத்திற்கு 1 + 2 + 2 என இரண்டு பக்கத்திலும் மொத்தமாக 10 பாற்சுரப்பிகள் உள்ளன.

  • ஜிஎப்டிஎல் கீழ் உரிமம் பெற்ற இடச்சு விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை இந்த உரை உள்ளடக்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மர்_சுண்டெலி&oldid=3646658" இலிருந்து மீள்விக்கப்பட்டது