உள்ளடக்கத்துக்குச் செல்

மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியான்மர் அரசு நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (ரோஸ் நிறம்), எல்லைப்புறங்களில் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்

மியான்மர் உள்நாட்டுப் போர் (Myanmar Civil War), மியான்மர் நாட்டை 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் ஆளும் சர்வாதிகார இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக மியான்மர் மக்களின் பல ஆயுதக் குழுக்கள் மே 2021 முதல் நடத்துகின்ற போர் ஆகும். 5 டிசம்பர் 2024 முடிய உள்நாட்டுப் போரில் 73,069+ பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[1] 1 மே 2024 முடிய 4,961 பொதுமக்கள் மற்றும் 26,601 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[2] 27,17,500 முதல் 3,0,00,000 வரை வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 1,13,700 மக்கள் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ளனர்.

பின்னணி

[தொகு]

2020 மியான்மர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி மிகப்பெரும்பான்மையான (83%) தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாய முன்னணி கட்சி வெற்றி பெற்றது செல்லாது என மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியதுடன், 1 பிப்ரவரி 2021 அன்று இராணுவப் புரட்சி மூலம்[3][4][5]நாட்டில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியும், நாடாளுமன்றத்தை முடக்கியும், ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் நாடு முழுவதும் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும், வன்முறைகளும் எழுச்சி பெற்றது.[6][7]

இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களால் மார்ச் 2023 முடிய எல்லைப்புற மாநிலங்களில் வாழும் 17.5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்றும், 1.6 மில்லியன் பொதுமக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும்; 55,000 குடியிருப்புகள் குண்டு வீச்சுகளால் அழிந்துள்ளது என ஐ. நா. மதிப்பீடு செய்துள்ளது.[8] மியான்மரிலிருந்து 40,000 பேர் அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் மக்கள் அடைக்கலம் அடைந்துள்ளனர்.[9]

அக்டோபர் 2023 முடிய மியான்மரின் 40% நிலம் அரசு தரைப்படை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு உள்ளாட்சிகள் (330 உள்ளாட்சிகள்) அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. [10][11]

இராணுவ ஆட்சிக்கு எதிரான போராளிகளின் படைகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ACLED Dashboard". ACLED. 22 April 2022 இம் மூலத்தில் இருந்து 1 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101211737/https://acleddata.com/dashboard#/dashboard. 
  2. "AAPP | Assistance Association for Political Prisoners". AAPP | Assistance Association for Political Prisoners. Archived from the original on 6 February 2021. Retrieved 18 March 2022.
  3. "Myanmar military seizes power, detains elected leader Aung San Suu Kyi". news.trust.org. Reuters. 1 February 2021. Archived from the original on 1 February 2021. Retrieved 1 February 2021.
  4. huaxia, ed. (1 February 2021). "Myanmar gov't declares 1-year state of emergency: President's Office". xinhuanet. Archived from the original on 1 February 2021. Retrieved 1 February 2021.
  5. "Myanmar Leader Aung San Suu Kyi, Others Detained by Military". voanews.com. VOA (Voice of America). 1 February 2021. Archived from the original on 3 February 2021. Retrieved 1 February 2021.
  6. "Myanmar Violence Escalates With Rise of 'Self-defense' Groups, Report Says". Agence France-Presse. Voice of America. 27 June 2021 இம் மூலத்தில் இருந்து 8 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220108225946/https://www.voanews.com/a/east-asia-pacific_myanmar-violence-escalates-rise-self-defense-groups-report-says/6207546.html. 
  7. "Myanmar anti-coup insurgents destroy police post, kill security forces -media". Reuters. Euronews. 23 May 2021 இம் மூலத்தில் இருந்து 5 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220105220135/https://www.euronews.com/2021/05/23/us-myanmar-politics. 
  8. "More than two years on, impact of Myanmar military coup 'devastating' | UN News". news.un.org (in ஆங்கிலம்). 2023-03-16. Archived from the original on 21 March 2023. Retrieved 2024-02-14.
  9. Mike (15 September 2022). "Mass Exodus: Successive Military Regimes in Myanmar Drive Out Millions of People". The Irrawaddy (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 October 2022. Retrieved 22 September 2022.
  10. Junta Controls Fewer Than 100 of Myanmar’s 350 Towns: NUG The Irrawaddy. August 13, 2024.
  11. "Myanmar's Junta Is Losing the Civil War". Council on Foreign Relations. Archived from the original on 13 October 2023. Retrieved 10 October 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]