மியர்சு லாங்சுட்ரெத்து

மியர்சு லாங்சுட்ரெத்து (Miers Longstreth) என்பவர் ஓர் அமெரிக்க வணிகர். 1819 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று பிறந்தார். மருத்துவர் என்றும் வானியலாளர் என்றும் தேசிய அறிவியல் அகாடமியின் நிறுவன உறுப்பினர் எனவும் பன்முகங்களில் அறியப்படுகிறார்.[1] மியர்சு பிசர் லாங்சுட்ரெத்து என்ற பெயராலும் அறியப்படுகிறார்.
மியர்சுலாங்சுட்ரெத்து பிலடெல்பியா நகரத்தில் பிறந்தார். கிளெர்மாண்ட்டு அகாடமியிலும் பின்னர் எம்.எல். அர்ல்பர்ட்டின் கிளாசிக்கல் அகாடமியிலும் படித்து 1833 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பள்ளியை விட்டு வெளியேறி ஒரு வன்பொருள் கடையில் வேலை செய்து, 1840 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் முழு உறுப்பினரானார். இருப்பினும், 1837 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் கல்லூரியில் விரிவுரைகளில் கலந்து கொண்டார்.[2] 1856 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[3]
தற்செயலாக, இவரது மனைவியின் வீட்டிற்கு அடுத்ததாக ஒரு புதிய நண்பர்கள் பள்ளி நிறுவப்பட்டது. அந்தப் பள்ளியில் ஒரு வானியல் ஆய்வகம் இருந்தது. அதைப் பயன்படுத்த மியர்சு லாங்சுட்ரெத்து அழைக்கப்பட்டார். விரைவில் தனக்கென ஒரு 5 அங்குல துளை தொலைநோக்கி, ஒரு வானியல் அளவைக் கருவி மற்றும் ஒரு வானியல் கடிகாரம் ஆகியனவற்றை சொந்தமாக்கிக் கொண்டார். இந்தக் கருவிகளைக் கொண்டு, சந்திரனின் நிலைக்கான அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த வாய்ப்பாடுகளில் ஒரு முரண்பாட்டைக் கண்டறிந்து, அவற்றை "லாங்சுட்ரெத்து சந்திர வாய்ப்பாடு" என்று மேம்படுத்தினார். இது பெஞ்சமின் பியர்சால் பெயரிடப்பட்டது மற்றும் அமெரிக்க கடல்சார் பஞ்சாங்கத்தில் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டது.[3]
மியர்சு லாங்சுட்ரெத்து 1848 ஆம் ஆண்டு அமெரிக்க தத்துவ சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1863 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அகாடமியின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.[4] தனது வாழ்நாள் முழுவதும் நண்பர்கள் சங்கத்தின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Miers Fisher Longstreth", Appleton's Cyclopedia of American Biography, New York: D. Appleton and Company, 1887-1889
- ↑ Volume, National Academy of Sciences (US) Committee on the Preparation of the Semi-Centennial (1913). BIOGRAPHICAL SKETCHES OF THE INCORPORATORS (in ஆங்கிலம்). National Academies Press (US).
- 1 2 "Miers Fisher Longstreth", National Academy of Sciences Biographical Memoirs
- ↑ "Miers Longstreth". www.nasonline.org. Retrieved 2023-01-20.