உள்ளடக்கத்துக்குச் செல்

மிம்லு சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிம்லு சென்
মিমলু সেন
மிம்லு சென் 2007-இல்
தாய்மொழியில் பெயர்মিমলু সেন
பிறப்பு1949
சில்லாங், மேகாலயா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • எழுத்தாளர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • இசையமைப்பாளர்
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
-முதல்
அரசியல் இயக்கம்நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி
வாழ்க்கைத்
துணை
பபன் தாஸ்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்பவுல் இசை, கிராமிய இசை-இணைப்பு இசை
வெளியீட்டு நிறுவனங்கள்போன்டி மியூசிகாலி
இணைந்த செயற்பாடுகள்

 

மிம்லு சென் (Mimlu Sen)(பிறப்பு 1949) என்பவர் இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஆவார்.

மிம்லு தனது முதல் புத்தகமான பால்சுபியரை 2009-இல் வெளியிட்டார். 2010ஆம் ஆண்டு இது தி கனி கேதரர்சு என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[1] வங்காளத்தின் கிராமப்புறங்களில் சென்னின் சாகசங்களை தி கனி கேதரர்சு விவரிக்கிறது என்று பியர்ஸ் மூர் ஈட் கூறினார்.[2]

வங்காள மொழி இசைக்கலைஞர் பபன் தாசு பவுலின் வாழ்க்கைத் துணையாக,[3][4] சென், பாபனுடன் அனைத்து இசைப் பதிவுகளிலும் இணைந்து பணியாற்றினார். உலகம் முழுவதும் இவருடைய குழுவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வகிக்கிறார். 2002-ஆம் ஆண்டில், பிரசெல்சைத் தளமாகக் கொண்ட பெல்ஜிய இசைத்தட்டு நிறுவனமான ஃபோன்டி மியூசிகாலி வெளியிட்ட, பாபன் தாசு பவுல், கவுர் க்யாபா மற்றும் நிமாய் கோசுவாமி [5] ஆகியோருடன் இணைந்து லெ சாண்ட் தேஸ் பவுல்ஸ் - மனுச்சே ஓ ராவுதன் என்ற வங்காள மொழி பாடல் இசைத்தொகுப்பில் இவர் இணைந்து பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சென் இந்தியாவின் மேகாலயாவின் சில்லாங்கில் பிறந்தார்.[4] 1960கள் மற்றும் 1970களில் இவர் கொல்கத்தாவில் படித்தார். இக்காலத்தில் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி தெருப் போராட்டங்களில் பங்கேற்றார். நக்சலைட்டு இயக்கத்திற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]

நூல் பட்டியல்

[தொகு]
  • Baulsphere. India: Random House India. 2009. ISBN 9788184000559. கணினி நூலகம் 762666034. OL 23873712M.
  • The Honey Gatherers. London: Rider (imprint). 2010. ISBN 9781846041891. கணினி நூலகம் 503647267. OL 24084518M.

இசைத் தொகுப்பு

[தொகு]
  • லே சாண்ட் டெசு பால்சு - மனுச்சே ஓ ரவுடன் (2002, பபன் தாசு பால், கோர் கியாபா & நிமாய் கோசுவாமியுடன் )

மேற்கோள்கள்

[தொகு]
  1. Knight 2014, ப. 34.
  2. Piers Moore Ede (2 May 2010). "The Honey Gatherers, By Mimlu Sen". Reviews (The Independent) இம் மூலத்தில் இருந்து 2022-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220515/https://www.independent.co.uk/arts-entertainment/books/reviews/the-honey-gatherers-by-mimlu-sen-1957173.html. பார்த்த நாள்: 23 October 2020.
  3. Lorea 2016, ப. 48.
  4. 1 2 3 De, Shobhaa (21 November 2014). "Mimlu Sen: "Born to be wild..."". Pune Mirror (Mumbai Mirror). https://punemirror.indiatimes.com/columns/columnists/shobhaa-de/mimlu-sen-born-to-be-wild-/articleshow/44247201.cms. பார்த்த நாள்: 23 October 2020.
  5. "Nimai Chand Baul". The Travelling Archive. 25 November 2003. Retrieved 13 October 2020.

ஆதாரங்கள்

[தொகு]

 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிம்லு_சென்&oldid=4393024" இலிருந்து மீள்விக்கப்பட்டது