மின் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின் விளையாட்டுக்கள்

மின் விளையாட்டுக்கள் (ஆங்கிலம்: Electronic sports) என்பது ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்பட ஆட்டப் போட்டிகள் ஆகும். 2010 கள் தொடக்கம் கணிசமான பணப் பரிசுகளையும், முழுநேர ஆட்டக்காரர்களைக் கொண்ட ஒரு துறையாக மின் விளையாட்டுக்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. பொதுவாக பல ஆட்டக்கார்கள் பங்குபெறும் நிகழ்நேர, வியூக, சண்டை மற்றும் மிகுபுனைவு ஆட்டங்கள் விளையாடப்படுகின்றன.

மின் விளையாட்டுக்கள் நிகழ்பட ஆட்டப் பண்பாட்டின் ஒரு கூறாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அண்மைக் காலமாகவே தொழில்முறை ஆட்டக்காரர்களையும் குழுக்களையும், ஒழுங்கமைப்பு நிறுவனங்களையும் கொண்ட ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது. இந்தப் போட்டிகள் ருவிச்.ரிவி (Twitch.tv) போன்ற தளங்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் நிகழ்த்தும் மின் விளையாட்டு நிகழ்வுகளைப் பல மில்லியன் டொலர்கள் வருமானத்தைப் பெறுகின்றன. பெரும் வணிகங்கள் 16 - 30 வயதினரை இலக்கு வைத்து, இந்த நிகழ்வுகளில் விளம்பரங்கள் செய்கின்றன.

2017 ல், ஏற்றுமதிகள் பார்வையாளர்களை மொத்தமாக 385 மில்லியன் மக்கள் உலகளாவிய அளவில் அடைந்தது.[1]

  1. Toptal - Esports: போட்டி வீடியோ கேமிங் ஒரு கையேடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_விளையாட்டுகள்&oldid=3040003" இலிருந்து மீள்விக்கப்பட்டது