மின் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசால் செயல்படுத்தப்படும் பல தேசிய மின் அளுமைத் திட்டதின் கீழ் வரும் 31 பணி செயல்வகை திட்டத்தில் இதுவும் ஒன்று.[1]

பணி செயல்வகை திட்டம் மூன்று வகையாக உள்ளது :

  • மத்திய பணி செயல்வகை திட்டம்(11).
  • மாநில பணி செயல்வகை திட்டம்(13).
  • ஒருங்கிணைகப்பட்ட பணி செயல்வகை திட்டம்(7).

மின் மாவட்டம் (e-District) 13 மாநில பணி செயல் வகை திட்டத்தில் ஒன்று ஆகும். இத்திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால், பொது மக்கள் மிக அதிக அளவில் பயன்தரும் அரசு சேவைகளை, பொது மக்களுக்கு இணைய சேவையாக வழங்குவது ஆகும். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஒரு சேவைக்காக, ஒரு துறையை நோக்கிப் பல முறை செல்வது குறையும். தங்கள் வீட்டில் இருக்கும் கணிப்பொறி, மற்றும் இணைய சேவையைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தே, அச்சேவையினை மின் விண்ணப்பம் மூலம் பெறலாம். தாணிப்பாறை மற்றும் இணையானவை இல்லாதோர், தங்கள் கிராமத்திலோ தங்கள் வீட்டின் அருகிலோ, இருக்கும் பொது சேவை மையத்தில், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில், அச்சேவையினைப் பெறவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.[2]

மாவட்ட மின் ஆளுமை சங்கம்[தொகு]

மின் மாவட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, இந்திய முழுவதும் சுமார் 672 மாவட்டட மின் ஆளுமை சங்கங்கள் உருவாக்க பட்டுள்ளன. இச்சங்கத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், மின் மாவட்ட மேளாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-12-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-11-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_மாவட்டம்&oldid=3717178" இருந்து மீள்விக்கப்பட்டது