மின் காந்த தொடர் வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்காந்த தொடர்வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.அதைப் பிரான்ஸ் நாட்டில் பறக்கும் தொடர்வண்டி என்றும் கூறுகிறார்கள்.இதை இயக்க,டீசல்,பெட்ரோல் போன்ற் எரிபொருள்கள் தேவையில்லை.நாம் குறிப்பிட்ட காந்த விலக்கு மற்றும் ஈர்ப்பு விசைகளைத் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தியதால் நமக்கு அதிவேகத் தொடர்வண்டி கிடைத்தது.இந்தத் தொடர்வண்டிக்குச் சக்கரங்கள் கிடையாது.தொடர்வண்டியின் அடிப்பகுதியிலும் வலிமை வாய்ந்த காந்தங்களைப் பொருத்தி இருக்கிறார்கள்.இந்தக் காந்தங்கள் தான் மின்காந்தங்கள். அதாவது மின்சாரம் பாயும்போது மட்டுமே இவை காந்தத் தன்மை பெறும்.அதுமட்டுமல்லாமல்,வடக்கு,தெற்கு எனத் துருவங்களையும் மாற்ற முடியும். தண்டவாளக் காந்தத்தின் வடக்கு மேல்நோக்கியும்,தொடர்வண்டியின் அடிப்பகுதியின் காந்தவடக்கு கீழ்நோக்கியும் இருக்கும்படியான ஒர் அமைப்பு உள்ளது.தண்டவாளத்தின் மேல்நோக்கியுள்ள வடதுருவம் தொடர்வண்டியில் கிழ்நோக்கியுள்ள வடதுருவத்தை விலக்கித் தள்ளுகிறது.விலக்குவிசை காரணமாக இந்த மின்காந்தத் தொடர்வண்டி சாதாரண தொடர்வண்டியைவிட அதி வேகமாகச் செல்கிறது.இந்த மிதக்கும் தொடர்வண்டி செல்லும்போது சத்தமே கேட்காது.இவ்வகைத் தொடர்வண்டிகள் ஜப்பான்,பிரானாஸ்,ஜெர்மனி,அமெரிக்க, சீனா முதலியநாடுகளில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

<ref>ஆறாம் வகுப்பு-தொகுதி 2-144<ref>