உள்ளடக்கத்துக்குச் செல்

மின் உடலியங்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின் உடலியங்கு இயலில், 'மின்பிடிப்பு நுட்பம்' ("Current Clamp") பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் நரம்பணு மின்பண்புகள் காட்டப்பட்டுள்ளது.

மின் உடலியங்கியல் (Electrophysiology) என்பது உயிரியல் செல்கள் மற்றும் திசுக்களின் மின் பண்புகளைப் பற்றி ஆய்வு செய்யும் உடலியலின் பிரிவாகும். இது ஒற்றை அயன் சேனல் புரதங்கள் முதல் இதயம் போன்ற முழு உறுப்புகள் வரை, பல்வேறு அளவுகளில் மின்னழுத்த மாற்றங்கள் அல்லது மின்சாரம் கையாளுதல்களின் அளவீடுகளை பற்றி அறியும் முறைகளை உள்ளடக்கியது ஆகும்.[1] நரம்பியல் துறையில், இது நியூரான்களின் மின் செயல்பாட்டின் அளவீடுகளையும், குறிப்பாக, செயல் திறன் செயல்பாட்டையும் அறிவது ஆகும். நரம்பு மண்டலத்திலிருந்து வரும் பெரிய அளவிலான மின் சமிக்ஞைகளின் பதிவுகளான, மின் உடலியல் பதிவுகள் என்றும் குறிப்பிடப்படலாம். இவை மின் நோயறிதலுக்கும், கண்காணிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

மின் உடலியல் என்பது உடலியலின் ஒரு பிரிவாகும், இது உயிரியல் திசுக்களில் அயனிகளின் ஓட்டம் (அயனி மின்னோட்டம்) மற்றும் குறிப்பாக, இந்த ஓட்டத்தை அளவிட உதவும் மின் பதிவு நுட்பங்கள் தொடர்பானது. பாரம்பரிய மின் உடலியல் நுட்பங்கள், உயிரியல் திசுக்களின் பல்வேறு தயாரிப்புகளில் மின்முனைகளை செயல்பாடுகளை விரிவாக கூறுகிறது.[2]

மின்முனைகளின் முக்கிய வகைகள்

[மூலத்தைத் தொகு]
  1. வட்டுகள், ஊசிகள் போன்ற எளிய திடக் கடத்திகள் (ஒற்றையாகவோ அல்லது வரிசையாகவோ, பெரும்பாலும் நுனியைத் தவிர மற்ற பகுதிகள் காப்பிடப்பட்டிருக்கும்),
  2. அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் அல்லது நெகிழ்வான பாலிமர்களில் உள்ள தடங்கள், இவையும் நுனியைத் தவிர மற்ற பகுதிகள் காப்பிடப்பட்டிருக்கும், மற்றும்
  3. பொட்டாசியம் குளோரைடு கரைசல் அல்லது மற்றொரு மின்பகுளிக் கரைசல் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குழாய்கள் போன்ற, மின்பகுளி நிரப்பப்பட்ட உள்ளீடற்ற, பெரும்பாலும் நீளமான அல்லது 'இழுக்கப்பட்ட' குழாய்கள்.

முக்கிய தயாரிப்புகளில் பின்வருவன அடங்கும்

[மூலத்தைத் தொகு]
  1. உயிரினங்கள் (எடுத்துக்காட்டாக பூச்சிகள்),
  2. வெட்டி எடுக்கப்பட்ட திசு (உடனடி அல்லது வளர்க்கப்பட்டது),
  3. வெட்டி எடுக்கப்பட்ட திசுவிலிருந்து (உடனடி அல்லது வளர்க்கப்பட்டது) பிரிக்கப்பட்ட செல்கள்,
  4. செயற்கையாக வளர்க்கப்பட்ட செல்கள் அல்லது திசுக்கள்
  5. மேற்கூறியவற்றின் கலப்பினங்கள்.

மேற்கோள்கள்

[மூலத்தைத் தொகு]
  1. Scanziani M, Häusser M (2009). "Electrophysiology in the age of light". Nature. 461 (7266): 930–39. Bibcode:2009Natur.461..930S. doi:10.1038/nature08540. PMID 19829373. S2CID 205218803.
  2. "Explore BMSEED's extracellular electrophysiology solutions. ✓ sensitive signal detection ✓ non-invasive recording ✓ optimized for neural and cardiac cells ➔ Elevate your electrophysiology research!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_உடலியங்கியல்&oldid=4523806" இலிருந்து மீள்விக்கப்பட்டது